Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 044 (We are Children of God through the Holy Spirit)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

7. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்வதால் நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் (ரோமர் 8:12-17)


ரோமர் 8:12-14
12 ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. 13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். 14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

நமக்குள் இருக்கும் எண்ணற்ற சுயநலச் சிந்தனைகளோடு பரிசுத்த ஆவியானவர் சமரசம் செய்துகொள்வதில்லை. அவையனைத்தும் நீக்கப்படும்வரை அவர் அவற்றிற்கு எதிராகப் போராடுகிறார். கிறிஸ்துவின் சிலுவையில் நீங்கள் மரணமடைந்ததை ஏற்றுக்கொண்டு, உங்கள் பெருமைக்கும், கோபத்திற்கும், பொய்களுக்கும், அனைத்துப் பாவங்களுக்கும் மரணமடையவில்லை என்றால் பரிசுத்த ஆவியானவர் உங்களைவிட்டுப் போய்விடுவார். ஒரு விசுவாசி ஆண்டவரின் ஆவியானவருக்குத் தன்னை திறந்துகொடுக்கும்படி, பணத்திற்கோ அல்லது வேறு எந்த களியாட்டங்களுக்கோ அடிமைப்பட்டவராக இருக்க முடியாது. ஒரு மனிதனுடைய உடலில் உள்ள கட்டியை வெட்டி அகற்றும் ஒரு மருத்துவனைப் போல பரிசுத்த ஆவியானவர் உங்களில் செயல்படுகிறார். மருத்துவரைப் போல அவர் நம்மை வெட்டி, நம்மில் இருக்கின்றன தீமையை அகற்றுகிறார். இவ்விதமாக பரிசுத்த ஆவியானவர் இருளிலிருந்து ஒளியினிடத்திற்கும், பொய்யிலிருந்து உண்மையினிடத்திற்கும், களியாட்டிலிருந்து இறைவனுடைய பிரசன்னத்திற்கும் நம்மை நடத்துகிறார். அவருடைய வழிநடத்துதலை நீங்கள் உணருகிறீர்களா? அவருடைய இரக்கமுள்ள சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்களா? அவர் உங்களில் மனமாற்றத்தை உண்டாக்கி, உங்களைச் சுத்திகரித்து, முழுவதும் மாற்றி, இரக்கமுள்ள கிறிஸ்துவினுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார். அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகியவற்றில் பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாகுதல் என்னும் அற்புதம் வெளிப்படுகிறது. இந்தக் குணாதிசயங்கள் தாழ்மை, இச்சையடக்கம், சாந்தம் மற்றும் கிறிஸ்துவினுடைய குணாதிசயங்கள் அனைத்திலும் கட்டப்பட்டிருப்பதால், நீங்கள் உங்கள் இரட்சகரினால் அலங்கரிக்கப்பட்டதைப் போல காணப்படுவீர்கள். இப்படி பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்வில் தென்றலாக வீசும்போது, நீங்கள் இறைவனுடைய பிள்ளையாகத் திகழ்கிறீர்கள். நீங்கள் பாவியாக இருந்தபோதிலும் கிறிஸ்துவினுடைய ஆவியினாலும் அவருடைய இரத்தத்தினாலும் அண்டசராசரங்களையும் படைத்தவருடைய உண்மையான பிள்ளையாக மாறியிருக்கிறீர்கள் என்பது எத்தனை பெரிய சலாக்கியம்? நீங்கள் இறைவனுடைய பிள்ளை என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? யாரெல்லாம் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள்.

ரோமர் 8:15-17
15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். 16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் பயத்தையும், மனச்சோர்வையும், எதிர்மறையான சிந்தனைகளையும், மனஅழுத்தத்தையும், குழப்பத்தையும் நம்மில் இருந்து நீக்கி, தைரியத்தையும், நம்பிக்கையையும், இறைவன் மீதான பற்றுதலையும் நமக்குக் கொடுக்கிறார். பிதாவினுடைய பெயரைக் கொண்டு பேசும்படி அவர் உங்கள் வாயைத் திறப்பார். அவ்வாறு நீங்கள் வாயைத் திறந்து அறிக்கை செய்யும்போது, நீங்கள் இறைவனுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறீர்கள். ஏனெனில் இதுவே புதிய உடன்படிக்கையின் அற்புதமாயிருக்கிறது. இறைவன் கிறிஸ்துவின் மூலமாக தம்மை பரலோக தகப்பனாக வெளிப்படுத்துகிறார். பாவத்தினால் கோபமடைந்த இறைவன் நம்மை முற்றிலும் அழித்துவிடுவதில்லை. மாறாக, ஒரு தகப்பனாக தம்முடைய அன்பை நம்மீது காண்பிக்கிறார். இறைவனுடைய இந்த தெய்வீகப் பண்பு நம்முடைய நடத்தையை முற்றிலும் மாற்றுகிறது. “அப்பா” என்ற வார்த்தை கிரேக்க வார்த்தைகளில் எழுதப்பட்ட அராமிய வார்த்தை. அதற்குத் தகப்பன் என்று பொருள். விண்ணப்பிக்கும்போது நாம் சொல்லும் இந்த முதல் வார்த்தை யூதர்களும் கிரேக்கர்களும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது.

தகப்பன் என்பது அப்பா என்ற வார்த்தையை விளக்குவதும் உறுதி செய்வதுமாக உள்ளது.

கிறிஸ்து தம்முடைய மாபெரும் அன்பினால், தம்முடைய உடலையே நமக்காக ஒப்புக்கொடுத்தார். அதனால் மகிமையின் இறைவன் தம்முடைய குமாரனுடைய உரிமைகளில் நமக்கும் பங்கு கொடுக்கிறார். நீங்கள் பரலோகத்திற்கு செல்லுவதற்கு ஒரு நுழைவுச் சீட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கற்பனை செய்துகொண்டால், அதில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் இறைவனுடைய பிள்ளையாக தத்தெடுத்துக்கொள்ளப்பட்டவர் என்று எழுதப்பட்டிருக்கும். அதில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் கையொப்பம் இடப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு நுழைவுச் சீட்டை நீங்கள் அற்பமாக எண்ணித் தவற விடுவீர்களா? ஆனால் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, கண்ணீரோடு முத்தமிட்டு, எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்வீர்கள் அல்லவா?

நீங்கள் பரிசுத்த ஆவியானவர் மூலமாக மறுபடியும் பிறக்கும்போது, அதன் மூலமாக மாபெரும் இறைவனுடைய தத்துப் பிள்ளையாக சட்டபூர்வமாக சுவீகரித்துக்கொள்ளப்படுகிறீர்கள். கிருபையினால் நிறைந்த இந்த நற்செய்தியைத்தான் பவுல் திரும்பத் திரும்ப அறிவித்தார். பரிசுத்தமுள்ள இறைவன் கிறிஸ்துவிற்குள் உங்களுக்கு அருகில் வந்திருப்பதால், நீங்கள் இறைவனையே சுதந்தரித்துக்கொள்வீர்கள். கிறிஸ்து உங்களுக்குள்ளும் தம்முடைய சீடர்கள் அனைவருக்குள்ளும் வாழ்கிறபடியால், அவர் தம்முடைய பிதாவின் மகிமையை தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு வெளிப்படுத்துவார். அப்போது இறைவனுடைய மகிமை நம் அனைவரிலும் வெளிப்படும். ஏனெனில் இறைவன் ஒன்றாயிருக்கிறார்.

கிறிஸ்துவில் கட்டப்பட்டிருக்கும் அனைத்துத் திருச்சபைகளிலும் பரிசுத்த ஆவியானவர் குடிகொண்டிருக்கிறபடியால், இந்த அற்புதங்கள் எல்லாம் நம்மில் ஆரம்பித்திருக்கிறது. அவருடைய ஒளி நம்மில் ஒளிருகிறதா? நீங்கள் இறைவனோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அப்படியானால், அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவினுடைய பெயரினிமித்தமாக மிகுந்த பாடுகளை அனுபவித்ததைப் போல நீங்களும் பாடுகளை அனுபவிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா?

விண்ணப்பம்:

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
உம்முடைய அரசு வருக
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களை சோதனைக்குள் நுழையப்பண்ணாமல், தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்.
இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றும் உம்முடையவைகளே. ஆமென்.

கேள்வி:

  1. பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்பிக்கும் இறைவனுடைய புதிய பெயர் என்ன? அதன் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 01:11 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)