Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- The Ten Commandments -- 12 Tenth Commandment: Do Not Covet Your Neigbor's House

Previous Lesson -- Next Lesson

TOPIC 6: THE TEN COMMANDMENTS - God's Protecting Wall that Keeps Man from Falling
An Exposition of the Ten Commandments in Exodus 20 in the Light of the Gospel

12 - பத்து கட்டளைகள் - மனிதனை விழாது காக்க இறைவன் கட்டிய மதிற்சுவர்கள்



யாத்திராகமம் 20:17
பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
(யாத்திராகமம் 20:17)


12.1 - நவீன சோதனைகள்

தொலைக்காட்சியை பார்க்கும் ஒவ்வொருவரும் தந்திரமிக்க வியாபாரங்களாகிய சோதனைகளில் வீழ்ந்து போவார்கள். ஒருவேளை நீங்கள் கவர்ச்சிகரமான பொருட்களை வாங்க ஓடுவீர்கள். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஒப்பந்தவங்களில் கையெழுத்திடுவீர்கள். விலை அதிகமான வாசனைத் திரவியம், உடைகள், மற்றும் விளையாட்டு கார்களை வாங்குவீர்கள். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கும். இந்த வியாபாரங்களில் நீங்கள் ஒரு போதும் இயேசுவின் எளிமையான கூற்றை கேட்க முடியாது. “உங்களை நீங்கள் வெறுத்துவிடுங்கள். உங்களுக்கு இருப்பது போதுமென்றிருங்கள்.” மாறாக அவர்கள் எப்போதும் இந்த செய்தியை கூறுவார்கள் “எல்லாவற்றிற்கும் ஆசைப்படுங்கள். உங்களுக்கு இல்லாத அனைத்தையும் வாங்குங்கள்.

தனது காதுகளுக்கருகில் பொம்மைகள், கரடி பொம்மைகள், மிருக பொம்மைகள், கார்கள் மற்றும் விளையாட்டுகளை ஒரு சிறு பையன் வைத்திருப்பது போல ஒரு பத்திரிக்கையில் படம் இருந்தது. அந்த சிறு பையன் விரும்பிய அனைத்தும் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அவன் விரும்பியும் கொடுக்கப்படாதிருந்த பொருள் எதுவுமில்லை. என்ன பரிதாபமான பையன் அவன். சமுதாயம் அவன் மீது அனைத்துக் காரியங்களையும் சுமத்தி, அவன் திருப்தியற்றவனாக இருக்கும்படி செய்கிறது. அவனது உலகமாகிய குழந்தைப் பருவத்தில் அவன் அமிழ்ந்து போகிறான்.

தொழில் சார்ந்த சமூகங்களில் மக்கள் பத்தாவது கட்டளைக்கு எதிரான மதிப்பீடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு கணவனும் மனைவியும் பல ஆண்டுகளாக உழைத்து, அவர்கள் நீண்ட காலம் ஆசைப்பட்ட வீட்டைக் கட்டுகிறார்கள். அவர்கள் அதிகமாக உழைக்கிறார்கள். ஒரு தாய் வேலை செய்யும்போது தன்னுடைய குழந்தைகளை புறக்கணிக்கிறாள், அவளும் சோர்ந்து போகிறாள். அவர்கள் வேலைகளை சுறுசுறுப்பாய் செய்ய அதிகமான காபி மற்றும் உற்சாக பானங்களை அருந்துகிறார்கள். அதனுடைய இறுதி விளைவு என்பது முற்றிலும் வெறுமையான ஒன்றாக உள்ளது. கடன் பிரச்சினைகளும், குடும்ப பிரச்சினைகளும் அதிகரிக்கிறது. ஏன்? ஏனெனில் அவர்களுக்குத் தேவையில்லாத காரியங்களில் அதிக பணத்தை அந்தக் குடும்பம் செலவழிக்கிறது. அவர்களுடைய சராசரி வருமானத்திற்கும் மேலாக அவர்கள் வாழுகிறார்கள்.


12.2 - சொத்துக்கள் வைத்திருக்கலாமா?

இயேசு கூறுகிறார். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?(மத்தேயு 16:26) மேலும் அவர் கூறுகிறார். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.(மாற்கு 8:35) யுத்த சமயங்களில் ஒரு நொடியில் எட்டு மாடிக் கட்டிடத்தை அழிக்க ஒரு அணுகுண்டு போதும். இறுதியில் அவைகள் அனைத்தும் சாம்பலாக மாறும். மில்லியன் கணக்கான அகதிகள் தங்களுக்கு சொந்தமான அனைத்தையும் இழக்கிறார்கள். கம்யூனிச நாட்டில் சொந்த வீடு அல்லது சொத்து வைத்திருக்கும் ஒவ்வொருவனும் அதிக வரிகள் செலுத்த வேண்டும். அவைகள் அந்த இடத்தின் வாடகையை விட அதிகமாக இருக்கும். இறுதியில் எதுவும் சொந்தம் இல்லாத ஒருவனைப் போல பொருளாதர ரீதியில் மிகவும் மோசமான நிலையை அவன் அடைகிறான். இறைவன் அவருடன் நம்மை ஒப்புரவாக்க விரும்புகிறார். அவருடைய கண்ணோட்டத்தில் நாம் உலகப் பொருட்களைப் பார்க்கும்படி நம்மை பெலப்படுத்துகிறார். பொருள் உடைமைகளை விட ஆவிக்குரிய சத்தியங்கள் அதிகம் விலையேறப்பெற்றவை.

தங்கள் சொத்துகளை பிரிக்கும் போது இந்தக் கொள்கையை கவனத்தில் கொள்ள வேண்டும். பணம் மற்றும் சொத்துகளைப் பங்கிடும்போது உறவினர்கள் மத்தியில் சமாதானத்தை நிலைப்படுத்த என்ன செய்ய வேண்டும்? இயேசு கூறுகிறார். “உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. (மத்தேயு 5:40) வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம் என்று பவுல் நமக்கு தெளிவுப்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவதில் இதுவே நம்முடைய வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். மற்றவர்களின் சொத்துகளை முடக்குவது தவறானதாகும். பத்திர மோசடி செய்பவர்கள் அல்லது வரி ஏய்ப்பு செய்பவர்கள் இறைவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு பாத்திரமானவர்கள். இறைவன் திக்கற்றோருக்கும், தகப்பன் இல்லாதோர்க்கும் பாதுகாவலராக இருக்கிறார்.


12.3 - மக்களை ஏமாற்றுதல்

பத்தாவது கட்டளை சொத்துகளை அடைவதை ஒழுங்குபடுத்துவதை மட்டும் குறிப்பிடுவது அல்ல. உடன் பணியாளர்கள், வேலைக்காரர்கள் அல்லது நண்பர்களை வஞ்சிப்பதை அது தடைசெய்கிறது. அதற்குப் பதிலாக நாம் அவர்களுக்கு சவாலிட வேண்டும். இடங்களை மாற்றுவதால் நமக்கும் அல்லது அவர்களுக்கும் ஏற்படும் சாதகங்கள் என்ன என்பது பொருட்டல்ல. திருச்சபைகள், சமுதாயங்கள், பள்ளிகள் மற்றும், தொண்டு நிறுவனங்களில் நாம் பத்தாவது கட்டளையை கடைப்பிடிக்க வேண்டும். சகோதரர்கள், சகோதரிகள் அல்லது உடன்பணியாளர்களை வஞ்சிப்பது எந்த ஆசீர்வாதத்தையும் கொண்டுவராது.

இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தின் ஐக்கியத்தை சீர்குலைக்க ஒரு கணவன் அல்லது மனைவி சோதிக்கப்படும்போது, யாரேனும் ஒருவர் அந்தக் குடும்பத்தின் காரியங்களில் தலையிட்டால், மாற்றத்திற்கான விருப்பம் அல்லது ஆழமான தவறான புரிந்துகொள்ளுதல் அல்லது ஒரு கூர்மையான விவாதம் எதுவும் நியாயப்படுத்த முடியாது. இயேசு தாமே கூறுகிறார். “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவன்”. ஒரு குடும்பத்தை சீரழிக்க ஒருவன் முயற்சித்தால் அல்லது திருமணத்திற்கு வெளியே உடலுறவில் ஈடுபட்டால், அவன் உடனடியாக மனந்திரும்ப வேண்டும். அவனது மனப்பான்மை மாற வேண்டும். அவனது குடும்பத்தைக் குறித்து பொறுப்புடன் நடப்பதற்கு ஆயத்தப்பட வேண்டும். அப்போது அவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும். அவன் பாவத்தின் எல்லா வடிவங்களையும் புறந்தள்ளவும், வெறுக்கவும் கற்றுக்கொள்வான். ஒரு இரவிற்கு வாழ்க்கைத் துணையை மாற்றுதல், திருமணத்திலிருந்து விடுபடுதல் அல்லது மற்ற வாழ்க்கை துணைகளை முயற்சித்து பார்த்தல் போன்ற தீய ஆலோசனைகளுக்கு அவன் இடமளிக்கக் கூடாது. பாவத்தின் எந்தவொரு வடிவத்திற்கும், பரிசுத்த ஆவியின் பெலத்தினால் அவன் விலகி வாழ வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின்றி நீங்கள் எதுவும் செய்ய இயலாது.


12.4 - நம்முடைய இச்சையினால் என்ன நேரிடும்?

நாம் ஆசைப்படக்கூடிய குறிப்பிட்ட மக்கள் மற்றும் பொருள்களைக் குறித்து பத்தாவது கட்டளை பேசுகிறது. அந்தப் பட்டியலில் நாம் இன்று இவைகளையும் இணைக்கலாம். கார்கள், இசைக்கருவிகள், வாஷிங்மெஷின்கள், குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் அலங்கார ஆடைகள். மற்றவர்களுக்கு இருப்பவை தனக்கும் வேண்டும் என்று பொதுவாக மனிதன் நினைக்கிறான். வாழ்வின் தரம் உயருதல் என்பது உண்மையாகவே அழிவைத்தான் கொண்டுவருகிறது. வளரும் நாடுகளில் வசதிமிக்க திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. அதன் மூலம் மக்கள் கடனாளிகளாகிறார்கள். வட்டியைக் கூட செலுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. அவர்கள் இப்போது பயன்படுத்த முடியாத நவீன மெஷின்களை வாங்கினார்கள். அதை எவ்விதம் சரி செய்வது என்பது யாருக்கும் தெரியவில்லை. உடைந்த பகுதிகளை மாற்றம் செய்யவும் முடிவதில்லை. தங்களுக்கு இருப்பவைகளில் திருப்தியாய் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தார்கள். ஆத்துமாவையும், சரீரத்தையும் அழிக்கக்கூடிய அதிகரிக்கும் கடன்களில் இருந்து விடுதலை தேவை. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். (மத்தேயு 20:26,27). இயேசு நம்முடைய உலகத்தின் எல்லா மதிப்பீடுகளையும் சரியான நிலைக்கு கொண்டுவரும்படி வந்தார். அவர் இவ்விதம் விண்ணப்பித்தார். அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (மத்தேயு 11:25-30)

ஒரு சில பணக்காரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கொரிந்து சபையில் இருந்த போது, இறைவன் எல்லா பெருமை மற்றும் அகங்காரத்தை முற்றிலும் அழிப்பார் என்று பவுல் எழுதினான். ஆதி சபைகளுக்கு வாழ்வின் இலக்குகளில் மாற்றம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இருதயம் ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்தது.

நம்முடைய தீமையான மற்றும் வெளியரங்கமான செயல்களை மட்டுமே பத்தாவது கட்டளை தடை செய்யவில்லை. அது மேலும் நம்முடைய மறைவான நோக்கங்களை கண்டிக்கிறது. ஒரு நபரின் குற்றங்களை ஒரு குறிப்பிட்ட அளவு நீதிமன்றம் கண்டு நியாயம்தீர்க்க முடியும். ஆனால் மனிதனின் இருதயம் இறைவனால் ஆராய்ந்து அறியப்படுகிறது. நாம் கூட நம்முடைய இருதயங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஏன் நம்முடைய நண்பர்கள் இவ்விதமாக நடக்கிறார்கள்? என்பதை நாம் சில சமயங்களில் வரையறுத்துக் கூற முடியாது. சில சமயங்களில் நமக்கு நாமே ஒரு புதிராக இருக்கிறோம். வேதாகமம் கூறுகிறது, “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, (ஆதியாகமம் 6:5) நம்முடைய பரிசுத்தத்தை நாம் இயேசுவின் பரிசுத்தத்தைக் கொண்டு அளவிடும்போது, நாம் எவ்வளவு அசுத்தமானவர்கள், கறைபடிந்தவர்கள் என்பதைக் காண முடியும். எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, (ரோமர் 3:23) தான் நினைத்தைப்பெற தொடர்ச்சியாக அழுது கொண்டேயிருக்கும் ஒரு குழந்தையிடம் நாம் இதைக் காணமுடியும். சிறுவர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றுகிறார்கள். அவர்களில் காணப்படுகின்ற பாவ சுபாவத்தை நாம் பார்க்கும் போது, “குழந்தைகள் அப்பாவிகள்” என்ற பொதுவான கருத்தை நிராகரிப்போம். வளரும் குழந்தை ஒவ்வொரு ஆசையையும் நிறைவேற்ற முயல்கிறது. அது முரட்டாட்டம் உள்ளதாகவும், சுயயநலமுள்ளதாகவும் செயல்படுகிறது. தீயவற்றை சிந்தனை செய்வதற்கும், தீயவற்றை செயலில் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒருவரும் சோதனையைத் தவிர்க்க இயலாது. ஆனால் உங்கள் முழு இருதயத்துடன் நீங்கள் தீமைக்கு எதிர்த்து நிற்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். டாக்டர். மார்டின் லூத்தர் சொல்கிறார், “என்னுடைய தலையின் மேல் பறவைகள் பறப்பதை நான் தடைசெய்ய முடியாது. ஆனால் என் தலை முடியில் அவைகள் கூடுகட்டுவதை தடைசெய்ய முடியும்”. சோதனையின் ஆரம்பத்தில் இருந்து நாம் அதைக் கவனித்து, அதற்கு எதிர்த்து நிற்க வேண்டும், அதை மேற்கொள்ள வேண்டும். பவுல் அடிக்கடி கிரேக்கத்தில் இவ்விதமாக எழுதுகிறார். “இந்த எண்ணம் எனக்குள் ஒருபோதும் பிறக்காதிருப்பதாக” சோதனையின் ஆரம்பத்தை யாக்கோபு தனது நிரூபத்தில் கோடிட்டுக் காண்பிக்கிறார். இறைவனிடம் இருந்து சோதனை வருவதில்லை என்பதை அதிகாரம் ஒன்றில் வலியுறுத்துகிறார். அவர் ஒருவரையும் பொல்லாங்கினால் சோதிக்கிறவரும் அல்ல. அவனவன் தனது சொந்த மாம்சம் மற்றும் இரத்தத்தின் இச்சைகளினால் இழுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறான். இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும் போது மரணத்தை பிறப்பிக்கும். அப்போஸ்தலன் தொடர்ந்து சொல்கிறார். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.(யாக்கோபு 1:16-18).

ஒரு கிறிஸ்தவ விசுவாசி தன்னுடைய ஆசைகள், இலக்குகள் மற்றும் நோக்கங்களை தினந்தோறும் ஒழுங்குபடுத்த இறைவனுடைய வார்த்தையை அனுமதிக்க வேண்டும். இயேசுவிற்கும் அவருடைய நித்திய கிருபைக்கும் நாம் அசுத்தமான எண்ணங்களை மேற்கொள்வது அமையும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. (மத்தேயு 6:13) இயேசுவின் இரத்தத்தின் மூலம் தங்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற நிச்சயத்துடன் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தரப்பட்ட கிறிஸ்துவின் நீதியை அவர்கள் பற்றிக்கொண்டுள்ளார்கள். அவர்கள் துணிகரமாக பாவம் செய்ய மாட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய சிந்தனைகள் மற்றும் மனப்பான்மைகளை பரிசுத்தப்படுத்துகிறார். நம்முடைய இருதயங்களின் எல்லா சிந்தனைகளிலும் வெற்றியுள்ள ஆண்டவராக இருக்க இயேசு விரும்புகிறார். வாழ்வில் உள்ள நமது போராட்டத்தை அவர் வழிநடத்த விரும்புகிறார். அவர் நமக்கு வெற்றியைத் தருகிறார். இது ஒரு தனிநபர் அல்லது நாட்டிற்கு எதிரான புனிதப்போர் அல்ல. மாறாக நமது சொந்தப் பெருமைக்கு எதிரான போர். வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் சோதனைகள், நமக்குள் குடி கொண்டிருக்கும் துன்மார்க்க ஆசைகளுக்கு எதிரான போர். நாம் விண்ணப்பம் ஏறெடுப்போம். நம்பிக்கையுடன் இருப்போம். உயிருள்ள ஆண்டவரே, வல்லமையுள்ள இரட்சகரே, நீர் என்னை இரட்சித்ததற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். இந்தப் பாவத்தில் நான் மறுபடியும் விழுவதற்கு, தயவுகூர்ந்து நீர் என்னை அனுமதியாதிரும். என்னில் தீமை நிலை கொள்ள அனுமதியாதிரும். என்னை ஆட்கொள்ளும் ஆண்டவரே. என்றென்றும் எனக்குள் வாசம்பண்ணும். உமது இரத்தத்தினால் என் சிந்தனைகளை தூய்மைப்படுத்தும் உமது ஆவியினால் என்னை முழுவதும் பரிசுத்தப்படுத்தும். எனது சித்தம் மற்றும் விருப்பம் உம்மை பிரியப்படுத்துவதாக.


12.5 - ஒரு புதிய இருதயம் மற்றும் ஒரு புதிய ஆவி

நமது சுய தீமைக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தில் நாம் ஈடுபடும்போது, இயேசு சொன்னதை உணரவேண்டும். “இருதயத்தில் இருந்து பொல்லாத சிந்தனைகள் புறப்பட்டுவரும். “ஆகவே தீய செயல்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது மட்டும் போதுமானது அல்ல. அல்லது குறிப்பிட்ட பாவங்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுவது மட்டும் அல்ல. அதைவிட அதிகமாக செய்ய வேண்டியுள்ளது. நமக்கு தூய மனச்சாட்சி, தூய மனம் மற்றும் புதிய இருதயம் தேவையாய் உள்ளது. எனவே பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் இயேசு தனது நோக்கங்களை நம்மில் நிறைவேற்றும்படி அவரிடம் கேட்போம். அவர் மூலமாக நம்முடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் பரிசுத்தமாக ஒப்புக்கொடுப்போம். நமது சரீரம் மட்டும் தீமையானது அல்ல. நமது ஆவி மற்றும் நமது ஆத்துமாவும் தீமை நிறைந்தது, பழைய மனிதனின் புதிய பிறப்பையும், அவனது சிந்தனைகள், மனப்பான்மையில் ஆவிக்குரிய புதுப்பித்தலையும் பத்தாவது கட்டளை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தனது கலகம் நிறைந்த மக்களுக்காக எரேமியா தீர்க்கதரிசி அதிகமாய் பாடுபட்டான். அவன் இறைவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டான். “அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.”(எரேமியா 31:33,34)

இறைவன் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு தன்னை வெளிப்படுத்தும்போது இதைப்போன்ற ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்தார். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.(எசேக்கியேல் 36:26,27) இந்த தீர்க்க தரிசனங்களின் வெளிப்பாடு கிடைப்பதற்கு 30 ஆண்டுகள் முன்பு இராஜாவாகிய தாவீது பின்வரும் மனந்திரும்புதலின் விண்ணப்பத்தை ஏறெடுத்தான்.

தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும். ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்கீதம் 51:1-17)

இந்த முன்னுதாரணமான தாவீதின் விண்ணப்பத்தை யார் ஏறெடுத்தாலும் நிச்சயமாக, இறைவனிடமிருந்து உறுதியான பதிலைப் பெறுவார்கள். இயேசு இந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி, இவ்விதம் கூறினார். மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12). மேலும் அவர் கூறினார். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:5)

அவருடைய ஊழியத்தில், இயேசு நிக்கொதேமு என்ற ஜனங்களின் மூப்பனாய் இருந்தவனுக்கு ஒரு காரியத்தை தெளிவுபடுத்தினார். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். (யோவான் 3:5) 3000 மக்களுக்கு முன்பு பெந்தெகோஸ்தே நாளில் பேதுரு இந்த வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்தினான். “ நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப்போஸ்தலர் 2:38)


12.6 - ஆவிக்குரிய போராட்டம்

பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணும் போது, நாம் சோதனைகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆவி மாம்சத்திற்கு விரோதமாக போரிடுகிறது. மாம்சம் ஆவிக்கு விரோதமாக போரிடுகிறது. இந்தப் போராட்டத்தை பவுல் இவ்விதம் கூறுகிறார். மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். (ரோமர் 8:13) எபேசியர் 4:22-24-ல் பவுல் இவ்விதம் கூறுகிறார். அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். பழைய மனுஷனைக் களைந்து என்பது நம்முடைய எல்லா பாவ ஆசைகளையும், மறுத்து, எப்பொழுதும் அதை வெறுப்பது என்பதாகும். புதிய மனுஷனைத் தரித்து என்பது இயேசுவை புதிய அங்கியைப் போல் தரித்துக் கொள்வதாகும். நம்முடைய உண்மையான சுயநலத்தை மேற்கொள்ள அவர் நமக்கு உதவுகிறார்.

பரிசுத்த வாழ்வை நாடி , நாம் போராடுகிற இந்த போராட்டத்தில், தோல்விகளால் துன்புற நேரிடும். அப்போது நாம் உடனடியாக மீண்டும் எழ வேண்டும். ஒளிவுமறைவின்றி நம்முடைய பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட வேண்டும். நம்முடைய பெருமை மற்றும் சுயநம்பிக்கை உடைக்கப்படும்போது, நாம் இயேசுவுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படுவோம். நம்முடைய பலவீனத்தில் அவருடைய பலத்தை அனுபவிப்போம். கர்த்தருக்குள் முதிர்ச்சியை நோக்கி செல்வதற்கும், தீமைக்கு எதிராக வெற்றியடையவதற்கும் இது மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. வேதாகமம் கூறுகிறது. “இறைவனின் ஆவியால் நடத்தப்படும் அனைவரும் இறைவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள்”. இந்த ஆவிக்குரிய போராட்டத்தில் பங்குபெறுகிற ஒவ்வொருவரையும் பவுல் ரோமர் 8:1-2-ல் ஆறுதல்படுத்துகிறார். ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. பழைய ஏற்பாடு நம்முடைய தீய நோக்கங்கள் மற்றும் செயல்களுக்கு நியாயப்பிரமாணத்தின் கீழ் தண்டனையைக் கொண்டு வருகிறது. புதிய ஏற்பாடு நம்முடைய முழுமையான பாவநிலையைக் குறித்த ஆழ்ந்த அறிவை நமக்குத் தருகிறது. அதே சமயத்தில் இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தினால் நமக்கு அருளப்படும் இறைவனுடைய நீதியை பெற்றுக்கொள்ளும்படி நம்மை கண்டித்து உணர்த்துகிறது. நம்முடைய மனம், சித்தம் புதுப்பிக்கப்படுவதற்கு பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளும்படி நம்மை அவர் பெலப்படுத்துகிறார். மோசேயின் நியாயப்பிரமாணம் நமது வீழ்ச்சியிலிருந்து நம்மை பாதுகாக்க முயற்சிக்கிறது. இயேசு முழுமையான நீதிமானாக்கப்படுதலை நமக்குத் தருகிறார். அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இறைவனின் ஆவியானவர் வல்லமையைத் தருகிறார். நம்முடைய தீய நோக்கங்களினால் நமது வாழ்வில் ஏற்படும் குழப்பங்களைக் குறித்து பழைய ஏற்பாடு வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. நம்முடைய பரலோகம் பிதா நமக்கு இறை நீதியைத் தருகின்றார். குற்ற உணர்வு இல்லை; ஆக்கினை இல்லை, இயேசு விலைக்கிரயத்தை செலுத்திவிட்டார். நம்மை நீதிமானாக்கியதோடு மட்டுமல்லாமல், பாவத்தை மேற்கொள்ள அவர் நித்திய ஆவியை தந்து நம்மை பெலப்படுத்துகிறார். நம்முடைய பாவத்திலிருந்து அந்த திரியேக இறைவன் நம்மை விடுவித்து, அவருடைய நீதியைத் தருகிறார். நமக்குள் இருக்கும் அவருடைய அன்பின் வல்லமையினால் தோல்வியிலிருந்து நம்மை வெற்றிக்கு நேராக வழிநடத்திச் செல்கிறார்.


12.7 - இஸ்லாமும் இச்சையும்

ஆவியின் மூலமாக மாம்சத்தின் மீது அடையும் வெற்றியை அல்லது நீதிமானாக்கப்படுதல் மூலம் நியாயப்பிரமாணம் நிறைவேற்றப்படுவதை இஸ்லாம் அறியவில்லை. குரான் கூறுகிறது “மனிதன் பலவீனமுள்ளவனாக படைக்கப்பட்டிருக்கிறான். (சுரா-அன்னிஸôவு 4:28). இவ்விதமாக இஸ்லாம் பகுதி குற்றச்சாட்டை அல்லாஹ் மீது சுமத்துகிறது. எனவேதான் மனிதர்கள் சோதனையில் வீழ்ந்து போய் விடாமல் இருக்க, நான்கு மனைவிகளைத் தவிர, வேறு மறுமனையாட்டிகளையும் திருமணம் செய்து கொள்ள முகம்மது அனுமதித்துள்ளார். (சுரா-அன்னிஸôவு 4:25) முகம்மது செய்யதுவின் மனைவியை மணந்துள்ளார். இந்த செய்யது அவருடைய தத்தெடுக்கப்பட்ட மகன் ஆவான். இந்த திருமணத்தைப் பொறுத்தமட்டில், செய்யதுவின் மனைவியை முகம்மது மணந்துகொள்ளும்படி அனுமதி அல்லாஹ்விடம் இருந்து சிறப்பான வெளிப்பாட்டின் மூலம் கிடைத்தது.

தன்னை முகம்மதுவிற்கு தந்துவிடும் ஒவ்வொரு பெண்ணிற்கும் இது பொருந்தும் (சுரா-அல்-அஹ்ஜாப் 33:37,50,51). மேலும் குரான் பலமுறை இவ்விதமாக வெளிப்படுத்துகின்றது. தமக்கு சித்தமானவனை அல்லா வழிநடத்துகிறார். தமக்கு சித்தமானவனை அல்லாஹ் தவறாக வழிநடத்துகிறார். (சுராஸ் இப்ராஹீம் 14:4, அல்-ஃபா(த்)தீர் 35:8). அதன் விளைவாகவே மனிதனிடத்திலும் அதிக நீதியுள்ள பொறுப்பு இருப்பதில்லை.

புனிதப் போர்களில் யுத்தத்தின் அழிந்த பகுதிகளை எடுத்து வருவது மிகவும் முக்கியமானதாக இருந்தது. சில சமயங்களில் போராளிகள் தோற்றுவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் முதிர்ச்சியற்ற தன்மையோடு அழிக்கப்பட்டவைகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்வார்கள். சில சமயங்களில் யுத்தத்தில் கைப்பற்றிய பொருட்களை பங்கிட்டுக் கொள்வதில் கடினமான விவாதங்கள் ஏற்படும். பொருள் வளம் ஒவ்வொரு முஸ்லீமின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க காரியத்தை இச்சையானது நிறைவேற்றும். அவனுக்கு அதிகாரம் மற்றும் அந்தஸ்து தான் அல்லாஹ்வின் அருளுக்கு ஆதாரங்கள் ஆகும். இவைகள் தான் முஸ்லீம் ஆட்சியாளர்களிடம் வெளிப்பட்டது. கிறிஸ்துவின் தாழ்மை மற்றும் சாந்தம் இஸ்லாமுக்கு அந்நியப்பட்டவை ஆகும்.

இரத்தம் சிந்தத்தக்க பழிவாங்குதல் என்பது இஸ்லாமில் தடை செய்யப்படவில்லை. முகம்மது தன்னுடைய சொந்த எதிரிகளை படுகொலை செய்ய தூதுவர்களை தனிப்பட்ட விதத்தில் அனுப்பினார். ஒரு மனிதன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும்போது அவனது பெருமைமிக்க ஆசைகள் நிறைவேறுவதில்லை. எந்தவொரு மாற்றமும் இல்லாத நிலை தொடரும். கிறிஸ்து தரும் இரட்சிப்பிற்கு தூரமானவனாகப் போவான். பிதாவாகிய இறைவன் மீது விசுவாசம் வைப்பது ஒரு முஸ்லீமிற்கு மன்னிக்க முடியாத பாவம் ஆகும். அவன் தனது சொந்த நற்செயல்களால் தன்னை இரட்சித்துக் கொள்ள முயல வேண்டும். நற்செயல்கள் என்பது இரக்கத்தின் செயல்கள் அல்ல. அவர்கள் விசுவாசத்தை அறிக்கையிடுதலைப்போல, அது மத சம்பந்தமான கடமைகளின் நிறைவேறுதல் ஆகும். இஸ்லாமிய விண்ணப்பம் என்பது ஒரு நாளில் ஐந்து முறை ஏறெடுக்கப்படுவதாகும். மேலும் ரம்ஜான் மாதத்தில் உபவாசமிருத்தல், ஏழைகளுக்கு உதவிசெய்தல், மெக்காவிற்கு புனிதப் பயணம், குரானை மனனம் செய்தல், இஸ்லாமை பரப்புவதற்கான புனிதப் போரில் சண்டையிடுவது ஆகியவைகள் ஆகும். ஒவ்வொரு முஸ்லீம் தன்னுடைய இருதயம் எவ்விதம் புதுப்பிக்கப்பட முடியும் என்பதை அறியாதவனாகவே இருக்கிறான். இந்த புதிய படைப்பு என்பது இயலாத காரியம். ஏனெனில் இஸ்லாமிற்கு உண்மையான பரிசுத்த ஆவியானவர் அறியப்படாதவராக இருக்கிறார். (சுரா-பனீ இஸ்ராயீல் 17:85). இஸ்லாமிய பரதீசில் அல்லாஹ் கூட அங்கு இருப்பதில்லை. அல்லாஹ்வுடன் ஐக்கியம் அல்லது ஏதாவது தொடர்பு குறித்த எந்த நம்பிக்கையும் இல்லை. அங்கே ஆவிக்குரிய புதுப்பித்தல் இல்லை அல்லது இஸ்லாமில் மனிதனுடைய பெருமைமிக்க சுயநலத்திற்கு எதிரான போராட்டம் இல்லை. ஒழுக்கரீதியாக மற்றும் ஆவிக்குரிய ரீதியாக, பழைய ஏற்பாட்டு நிலையில் இருந்து மிகவும் கீழான நிலையிலும், புதிய ஏற்பாட்டு நிலைக்கு ஒப்பிட முடியாத நிலையிலும் இஸ்லாம் இருக்கின்றது.


12.8 - கிறிஸ்துவே நமது ஒரே நம்பிக்கை

முஸ்லீம்கள் அல்லது யூதர்களுக்கு எதிரான மனவெறுப்பை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் எவரையும் விட சிறந்த கிறிஸ்தவன் என்று யாரும் இல்லை. கிறிஸ்துவின் மீது வைத்த விசுவாசத்தினால் மட்டுமே நாம் நீதியைப் பெற்றோம். நீதியுள்ள, பரிசுத்தமுள்ள வாழ்வு வாழ பெலனைப் பெறுகிறோம். இயேசு திராட்சைச் செடி. நாம் கிளைகள். நாம் பெருமையில் இருந்து விலகி, அவருக்குள் நிலைத்திருந்து, அவருடைய ஆவியானவரின் கனியைக் கொடுக்க வேண்டும். இயேசு இன்றி நாம் எந்தவொரு நன்மையும் செய்ய இயலாது. அவரே நம்முடைய அளவுகோலாக இருக்கிறார்.

www.Waters-of-Life.net

Page last modified on March 18, 2015, at 06:46 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)