Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 013 (The Wrath of God against the Nations)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18-3:20)

1. தேசங்களுக்கு எதிரான இறைவனின் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது (ரோமர் 1:18-32)


ரோமர் 1:26-28
26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். 27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். 28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

பவுல் இந்த பயங்கரமான வார்த்தையை பவுல் இவ்விதம் எழுதுகிறார். “இறைவன் அவர்களை ஒப்புக்கொடுத்தார்” என்று முதல் அதிகாரத்தில் மூன்று முறை வருகின்றது. இந்த பதமானது முடிவு, கோபம், ஆக்கினையின் முதல் நிலை என்பதை குறிப்பிடுகிறது. தீமையின் வல்லமைக்கு இறைவன் யாரை ஒப்புக்கொடுத்துள்ளாரோ அவர்களுக்கு ஐயோ. சர்வவல்லமையுள்ளவரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் இருந்து அவர்கள் விழுந்து போனார்கள்.

இறைவனை விட்டு ஏற்பட்ட இந்த பிரிவு பல்வேறு இச்சைகள், நாத்திக சிந்தனைகள் வெளிப்பட காரணமாயிருந்தது. அவர்கள் மிருகத்தைப் போல ஓடுகிறார்கள். தங்களுடைய பாலியல் இச்சைகளை திருப்தி செய்வதை மட்டும் சிந்திக்கிறார்கள். எந்த மனிதனின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணவில்லையோ, எவனுடைய சரீரத்தையும், மனதையும் அவர் ஆளுகை செய்யவில்லையோ அவன் நல்லவனைப்போல, சாந்தமுள்ளவனைப் போல முகமூடி அணிந்திருந்தாலும், விபசாரக்காரனாய் மாறுகிறான்.

பொதுவாக இன்று ஆண், பெண் சமத்துவம் பேசப்படுகிற காலத்தில், சில பெண்கள் ஆண் இல்லாமல் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள உரிமையுண்டு என்று வாதிடுகிறார்கள். சில நிறுவனங்கள் மக்கள் பெருக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, ஓரினச்சேர்க்கையை முன்மொழிகிறார்கள். சுபாவத்திற்கு விரோதமாக தங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் மீது இறைவனின் கோபாக்கினை வரும் என்று பவுல் கூறுகிறார்.

அவர்கள் அனைவரும் மிகப்பெரிய வேதனையுடன், தங்கள் மனங்களில் பல்வேறு குழப்பங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் சாதாரண மக்களைப் போல் இல்லை. அவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்கள் விரும்பாததை செய்கிறார்கள். பாவத்தை செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறான். அவர்கள் பலம் உள்ளவர்களாக, பாவத்தில் ஈடுபடுகிறவர்களாக, இறைவனுடைய ஒழுங்கில் நிலைத்திராமல், அடிமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

நாகரீகத்தின் வீழ்ச்சிக்கான காரணம் மிகவும் ஆழமானது. தீமையின் சாராம்சம் என்பது பாலியல் பாவங்கள் அல்ல. தங்கள் மனங்களில் இறைவனை ஏற்றுக்கொள்ளாததே அவர்கள் கறைபடிந்ததற்கு காரணம். அவர்கள் இறைவனை விட தங்களையும், உலகத்தையும் அதிகமாய் நேசித்தார்கள். அவர்கள் அசுத்தத்திலிருந்து விபசாரத்திற்குள் விழுந்தார்கள். கிறிஸ்துவின் மூலம் இரட்சிக்கப்பட்ட மக்களின் சாட்சிகளைக் கேட்கிறவர்கள், இரட்சிப்பிற்கு முன்பு அவர்கள் இறைவனை விட தூரமாய் இருந்தவர்கள் என்பதை உடனடியாக உணர்ந்து கொள்வார்கள். அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம், எல்லாவித பாலியல் பாவங்கள் மற்றும் அசுத்தங்களுக்கு அடிமைகளாக மாறினார்கள். ஆனால் கிறிஸ்து அவர்களை கண்டபோது, அவர்கள் பாவமன்னிப்பு, பரிசுத்தம், மாற்றம், ஆறுதல், பெலன், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியைப் பெற்றார்கள்.

இறைவனை விட்டு மனப்பூர்வமாய் விலகிச் செல்பவன், பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு எதிர்த்து மனந்திரும்பவும், மீட்படையவும் மறுக்கிறவன் தகாதவைகளைச் செய்கிற மனதை பெற்றிருக்கிறான். மனிதன் மீது அறிவிக்கப்பட்ட இந்த தீர்ப்பின் வாக்கியத்தைப் போல, இறைவனுடைய கரத்தால் எழுதப்பட்ட “தகாதவைகளைச் செய்கிற” என்ற வாக்கியத்தைப் போல வேறு தீர்ப்பின் வாக்கியம் இல்லை. அவன் இறைவனிடம் திரும்புகிறதில்லை. ஏனெனில் அப்படிப்பட்ட திருந்துதலுக்கு மனமாற்றம் தேவை. மனந்திரும்புதல் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் மனமாற்றம் என்பதாகும். இறைவன் மனிதர்களின் இருதயங்களில் அடிப்படையான மற்றும் முழுமையான மாற்றத்தை எதிர்பார்க்கிறார். அது சிந்தனை மற்றும் நடத்தையில் நேர் எதிர் மாற்றத்தை உள்ளடக்கியது ஆகும். அப்போது அவர்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள், புதுப்பிக்கப்படுகிறார்கள்.

இப்போது, உங்கள் இருதயத்தின் நிலை என்ன? இறைவனின் ஆவிக்கு , அவர் தரும் இரட்சிப்பு மற்றும் பரிசுத்தத்திற்கு உன் மனம் திறந்துள்ளதா? இறைவனை விட்டு விலகி, வேறுபட்ட வாழ்வு வாழ்கின்றாயா? “இன்று” உனக்குரிய தருணம். அவரிடம் திரும்பு. உன் மனதை தூய்மையாக்கவும், உன் இருதயத்தை மாற்றி அமைக்கவும், உன் ஆண்டவரிடம் கேள். உனது கடந்தகாலம் அசுத்தமாய் இருக்க அனுமதியாதே. உனது ஆண்டவரே உன்னைக் குணமாக்குபவர். அவர் ஒருவர் மட்டுமே உன்னை எல்லா காரியங்களிலும் இருந்து விடுவிப்பார். உனது முழு இருதயத்தோடும் உனது இச்சைகளில் இருந்து விடுபட நீ விரும்பும்போது, அவர் விடுவிப்பார். உன்னை நீயே விடுவித்துக் கொள்ள முடியாது. உன்னை இரட்சிக்க ஆயத்தமாயிருக்கிறது. உனது ஆண்டவர் தரும் இரட்சிப்பை அடைய விருப்பத்துடன் அவரிடம் கேள்.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனே. நீர் என்னை அறிகிறீர். என்னுடைய சிந்தனைகள் எல்லாம் உமக்கு முன்பாக வெளியரங்கமாய் உள்ளது. என் கடந்த காலத்தை நீர் அறிகிறீர். நான் யாருக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்பதை அறிகிறீர். எனது இச்சைகளுக்காக என்னை மன்னியும். என் மனதை தூய்மைப்படுத்தும். நான் உம்மை நேசிக்கும்படி, உமது வார்த்தையின் அருகே என்னைக் கொண்டுவாரும். நான் இனிமேல் பாவம் செய்ய விரும்பவில்லை. எனக்குள் உறுதியான சித்தத்தை உருவாக்கும். உமது கரத்திலிருந்து என் விடுதலையை நான் பெற்றுக்கொள்ளச் செய்யும். தகாதவைகளைச் செய்யும் மனம் மற்றும் கறைப்பட்ட சரீரத்திலிருந்து என்னை காப்பாற்றும். நீரே என்னுடைய மருத்துவர், என்னுடைய இரட்சகர். நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

கேள்வி:

  1. இறைவனுடைய கோபாக்கினையின் வெளிப்பாட்டை பவுல் எவ்விதம் தெரிவிக்கிறான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)