Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 013 (Christ Heals All Diseases)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - கலிலேயாவில் இயேசுவின் ஊழிய ஆரம்பம் (மாற்கு 1:14 - 1:45)

4. விண்ணப்பிக்கும் பரலோக மருத்துவர் அனைத்து வியாதிகளையும் குணமாக்குகிறார் (மாற்கு 1:29-39)


மாற்கு 1:29-39
29 உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள். 30 அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள். 31 அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். 32 சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 33 பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். 34 பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை. 35 அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். 36 சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், 37 அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். 38 அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்;இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; 39 கலிலேயா நாடெங்கும்அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும்,பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

அப்போஸ்தலனாகிய பேதுரு திருமணம் முடித்தவர். கிறிஸ்தவ ஊழியர்களுக்கு திருமணம் என்பது பாவம் அல்ல. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அடிக்கடி பல்வேறு சோதனைகளால் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் வீடுகள் எப்போதும் சோதனைகள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. எனவே நமக்கு கிறிஸ்துவின் அனுதின பாதுகாப்பும், அவருடைய பிரசன்னமும் தேவை.

பேதுருவின் மாமியார் வியாதியாய் இருந்தாள். அவள் படுக்கையில் இருந்தாள். கடுமையான காய்ச்சல் அவளுக்கு இருந்தது. இரட்சகர் அவர்களுக்கு அருகில் இருந்தார். அவருடைய வல்லமையை அவர்கள் அனுபவித்திருந்தார்கள். அவருடைய பாதுகாப்பை நம்பினார்கள். இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தார். இயேசு அவனுடைய மாமியின் கையைப் பிடித்து தூக்கிவிட்டார். தனது வல்லமையினால் வியாதியை சுகமாக்கினார். கிறிஸ்து வெற்றியுள்ள மருத்துவராகவும், உண்மையுள்ள இரட்சகராகவும் இருக்கிறார்.

அவர் சுகமாக்கியதின் விளைவு உடனடியாகத் தெரிந்தது. சுகமாக்கப்பட்ட பெண் உடனடியாக எழுந்தாள். அவருடைய விருந்தினர்களுக்கு பணிவிடை செய்தாள். இதைப் போலவே கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அவருடைய பணிக்கென்று தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். பணிவிடை செய்வது என்பது விசுவாசிகளின் அடையாளமாக உள்ளது. இறைவனின் குமாரன் இந்த உலகத்திற்கு ஊழியம் கொள்ளும்படி வரவில்லை. அவர் ஊழியம் செய்யும்படி வந்தார். அநேகரை மீட்கும் பொருளாகத் தமது ஜீவனைக் கொடுக்க வந்தார்.

அவர் சுகமாக்கியதின் விளைவு உடனடியாகத் தெரிந்தது. சுகமாக்கப்பட்ட பெண் உடனடியாக எழுந்தாள். அவருடைய விருந்தினர்களுக்கு பணிவிடை செய்தாள். இதைப் போலவே கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அவருடைய பணிக்கென்று தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். பணிவிடை செய்வது என்பது விசுவாசிகளின் அடையாளமாக உள்ளது. இறைவனின் குமாரன் இந்த உலகத்திற்கு ஊழியம் கொள்ளும்படி வரவில்லை. அவர் ஊழியம் செய்யும்படி வந்தார். அநேகரை மீட்கும் பொருளாகத் தமது ஜீவனைக் கொடுக்க வந்தார்.

கிறிஸ்துவின் அன்பில் இருந்து, அவரை விசுவாசிப்பவர்களுக்கு பெரிய வல்லமை வெளிப்படுகின்றது. இருப்பினும் அவர் குணமாக்கும் போது, எப்போதுமே இறைவனுக்கும், சாத்தானுக்கும் இடையில் ஓர் போராட்டம் இருக்கிறது. பிசாசுகளின் அதிகாரங்கள் அவரை அறிந்திருக்கின்றன. அவருக்குப் பயப்படுகின்றன. அவைகள் அவருக்குக் கீழ்ப்படிகின்றன. அவருடைய கட்டளையின் வார்த்தையினால் துரத்தப்படுகின்றன. இறைவனின் குமாரன் தம்முடைய வார்த்தையில் வல்லமையுள்ளவர். அசுத்த ஆவிகள் அவருடைய பரிசுத்தத்தையும், வல்லமையையும் அறிவிப்பதை அவர் தடை செய்தார். அவர் நரகத்தின் சாட்சியின் மூலமாக மனிதர்களை வெல்ல விரும்பவில்லை.

கடந்த நாளின் பாரங்களினால் இயேசு மிகவும் சோர்ந்திருந்தார். ஆனாலும் அவர் அதிகாலையில் எழுந்தார். தம்முடைய பிதாவினிடம் தனித்திருக்கும்படி வனாந்தரத்திற்குச் சென்றார். இறைவனின் குமாரன் விண்ணப்பம் பண்ணினார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். யாருக்கெல்லாம் அவர் பணிசெய்யப் போகிறாரோ, அவைகளைக் குறித்து தம்முடைய பிதாவிடம் பேசினார். இந்த விண்ணப்பங்களினால், பரலோகத்தின் உயிர்ப்பிக்கும் வல்லமை அவருடைய சரீரத்தில் தங்கியிருந்தது. அற்புதமான கிருபையின் ஊற்று அனைவருக்கும் உண்டு. நீங்கள் ஆண்டவரின் பணியாளரா? நீங்கள் அசுத்த ஆவிகளுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தில் நிற்கிறீர்களா? நீங்கள் தொடர்ச்சியாகவும், உண்மையாகவும் விண்ணப்பம் ஏறெடுக்கவில்லையென்றால் உங்கள் யுத்தத்தில் ஜெயிக்க மாட்டீர்கள். உங்கள் படுக்கையை விட்டு எழுந்திருங்கள். சோம்பலாய் இராதீர்கள். இறைவனின் குமாரன் செய்தது போல விண்ணப்பம் பண்ணுங்கள். ஆவியில் விண்ணப்பம் பண்ணுவது தூங்குவதை விட மேலானது. அப்போது நீங்கள் இறைவனின் அழைப்பையும், வழிநடத்துதலையும் பெறுவீர்கள். மேலும் பல ஆசீர்வாதங்களை அடைவீர்கள். இன்று உங்கள் மூலமாக ஆண்டவர் செய்ய விரும்புவதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள் தாழ்மையுடன் பிரசங்கிக்கும்படி அவர் உங்களை அனுப்புவார். உங்கள் நகரத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீங்கள் சாட்சி பகர உதவி செய்வார். இறைவனின் வல்லமையை நீங்கள் நற்செய்தியில் காண முடியும். கேட்க விருப்பம் உள்ள மக்களுக்கு சாட்சி பகருங்கள். உங்கள் வார்த்தைகள் கிறிஸ்துவின் வாழ்வையும், அவர் உங்களுக்குச் செய்ததையும் வெளிப்படுத்தட்டும். அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களிடம் இருந்து பிசாசுகள் வெளியேறும். இறைவனின் ஆவியானவர் யுத்தம் செய்கிறார். உங்கள் சாட்சியான வாழ்வின் மூலம் பிசாசின் ஆவி துரத்தப்படும்.

விண்ணப்பம்: கிறிஸ்துவே, நீர் மனுஷகுமாரன், ஆளுகிறவர், வெற்றியாளர், சுகமாக்குகிறவர், இரட்சகர். இருளின் வல்லமைகள் உம்முடைய அரசின் வருகையை புரிந்துகொண்டிருந்தன. நாங்கள் விண்ணப்பம் பண்ணுகிறோம். உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல எங்கள் வீடுகளிலும் செய்யப்படுவதாக. தொடர்ச்சியாக விண்ணப்பம் செய்யவும், சாட்சியாக வாழவும் எங்களை பயிற்றுவியும். எல்லா நேரங்களிலும் உமது இரத்தத்தினால் எங்களை காத்துக்கொள்ளும். எங்கள் நண்பர்களுக்கு இரட்சிப்பையும், குணமாக்குதலையும் தாரும். அப்போது நாங்கள் உமது சாயலின்படி மாற்றப்படுவோம். ஆமென்.

கேள்வி:

  1. நற்செய்தியாளர் மாற்கு எவ்விதம் தனது நற்செய்தியில் கிறிஸ்துவைக் காண்பிக்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 08:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)