Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 081 (God Will not Consume Men)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

8. இறைவன் நியாயந்தீர்த்தாலும் மனிதர்களை முற்றிலும் அழிப்பதில்லை (மாற்கு 13:28-30)


மாற்கு 13:28-30
28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். 29 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். 30 இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நீ எதிர்பார்த்து இருக்கிறாயா? அப்படியென்றால் உலகக் காரியங்களை விட்டு ஆவியாயிருக்கின்ற ஆண்டவரை நோக்கி உனது கவனத்தைத் திருப்பு.

கடைசி கால நிகழ்வுகள், அவருடைய வருகையைக் குறித்த ஒரு கால அட்டவணையை இயேசு தமது சீஷர்களுக்கு கொடுக்கவில்லை. அவர்கள் விழிப்பாயிருக்கும்படி சொன்னார். எனவே வரலாற்று நிகழ்வுகளின் மூலம் அடையாளங்களை ஆய்வு செய்து, நாம் எங்கே வந்திருக்கிறோம். எவ்விதம் முடிவு நெருங்கியுள்ளது என்பதைக் காண்போம்.

கடைசிநாட்களைக் குறித்த ஒரு அடையாளம் அத்திமரம் ஆகும். இது பழைய உடன்படிக்கையின் சின்னம் ஆகும். இயேசு இதைக் குறித்து பலமுறை பேசியுள்ளார். அவருடைய பெயர் இயேசு என்னப்படும். ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். ஆனாலும் ஆண்டவர் அவர்களை இரட்சிக்கும்படி, அவரை அவர்கள் அனுமதிக்கவில்லை தங்களுடைய இரட்சகர் மெய்யான பிரதான ஆசாரியராக இருந்தும், அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் இறைவனுடைய பலிபீடத்தில் கிடத்தப்பட்டபோது அவர்களுக்காக வேண்டிக்கொண்டார். “பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்!”.

கடின இருதயமுள்ள யூதர்கள் அடையப் போகும் இரட்சிப்பை இயேசுவின் ஆவிக்குரிய கண்கள் கண்டன. உலகத்திற்கு அவருடைய நற்செய்தி பிரசங்கிக்கப்படும். கிறிஸ்துவின் வல்லமையுள்ள ராஜ்யத்திற்குள் தேசங்கள் இணையும். மறுபடியும் ஆண்டவர் பழைய உடன்படிக்கை மக்களுக்கு மனந்திரும்பும் வாய்ப்பைத் தருவார். செத்துப்போன அத்திமரம், உலக வரலாற்றில் ஒரு ஆவியைப் போல மறைந்த தேசம். மீண்டும் கிருபை பெற்று துளிர்க்க ஆரம்பிக்கும். அது கனி தருவதைக் குறிக்கும். மேலும் வரப்போகிற கோடைக்காலத்தை உணர்த்தும். இது எரிகின்ற அக்கினியின் கடைசி வாதைகளை உள்ளடக்கியுள்ளது.

இயேசு தெளிவாகக் கூறினார். “இவைகள் நிகழும் போது, எனது வருகை சமீபம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இதோ வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன்”. ஆவிக்குரிய முன்னேற்றத்தை அறிந்துகொள்வதற்கு இதை உணர்வது அவசியம். எல்லா மக்களையும் மன்னிக்கும்படி அவர் ஆயத்தமாக இருக்கிறார். ஆண்டவருடைய வருகையின் போது நாம் அன்பு, பரிசுத்தம் மற்றும் சத்தியத்தில் இணைந்திருப்பதைக் காண்பார்.

இயேசு கூறினார். “இவைகள் எல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது”. இந்தச் சந்ததி என்பதற்கு வேறுபட்ட வியாக்கியானங்கள் உள்ளன.

அவரைச் சுற்றியிருந்த ஒரு சிலர் எருசலேமின் வீழ்ச்சி (கி.பி 70) வரை உயிருடன் இருப்பார்கள் என்று குறிக்கின்றது. கிறிஸ்து இதை கி.பி 33-ல் கூறினார்.

“இந்தச் சந்ததி” என்ற பதம் எல்லா மனிதர்களையும் உள்ளடக்கியுள்ளது. நாம் ஆறுதலை அடைவோம். நியூக்ளியர் அணுகுண்டுகள், உலகப்போர்கள், விசுவாசிகளுக்கு உபத்திரவங்கள் மத்தியிலும் மனுக்குலம் முற்றிலும் அழிந்து போகாது. நிச்சயமாய் வரப்போகின்ற ஆண்டவருடைய நாளைக் காண ஒரு சிலர் மீந்திருப்பார்கள்.

இந்தப் பதம் பழைய உடன்படிக்கை மக்களைக் குறிப்பிடலாம். கீழ்ப்படியாதவர்கள் மீதான நியாயத்தீர்ப்பு மத்தியிலும் ஆண்டவர் தமது கிருபையைத் தருகிறார். மனந்திரும்பும் வாய்ப்பைக் கொடுக்கிறார். மரணத்தை மேற்கொள்ளச் செய்கிறார்.

மூன்று வேறுபட்ட வியாக்கியானங்களும் நியாயத்தீர்ப்பின் மத்தியிலும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அழிந்துபோகாதபடி இறைவனின் கிருபையால் பாதுகாக்கப்படுவதை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கிருபையைப் பற்றிக் கொள்கிறவன் தன்னுடைய ஆண்டவரை நன்றியுடன் ஆராதிக்கிறான்.

விண்ணப்பம்: எங்கள் பரிசுத்த இறைவனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது கோபாக்கினையைவிட உமது அன்பு பெரியது. உமது பரிசுத்தத்தைவிட உமது கிருபை முந்திக்கொள்கிறது. பாவிகளாகிய எங்களிடம் நீர் வந்தீர். எங்களிடம் பொறுமையாய் இருக்கிறீர். உமது குமாரன் தன்னையே பலியாகத் தந்திருக்கிறார். ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு இந்த கடைசி நாட்களில் மனந்திரும்பும் கிருபையையும், மறுபிறப்பையும் தாரும். அவர்கள் பெருமை கொண்டு, அழிவுக்குரிய ஆயுதங்கள், பணம், உலக வல்லமையை சார்ந்துகொள்ளாதபடி செய்யும். உம்மைப் போல இருதயத்தில் தாழ்மையுடன் இருக்க உதவும். உமது வார்த்தையினால் என்னை மாற்றும். ஆமென்.

கேள்வி:

  1. “இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்த சந்ததி ஒழிந்து போகாது”. என்ற கூற்றின் அர்த்தம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 08:00 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)