Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 054 (Calling to Fair-Mindedness)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

7. தாராள மனதுடன் இருக்கும்படியான அழைப்பு (மாற்கு 9:38-41)


மாற்கு 9:38-41
38 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன்ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன்நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான். 39 அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ் செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். 40 நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். 41 நீங்கள் கிறிஸ்துவினுடைய வர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

சீஷனாகிய யோவான் கிறிஸ்துவின் அன்பை அறியும் முன்பு குறுகிய மனதுடன், பொறாமை, பெருமையுடன் இருந்தான். இயேசுவைப் பின்பற்றாதவன் இயேசுவின் நாமத்தினால் அசுத்த ஆவிகளைத் துரத்தியதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யோவான் கோபத்துடன் இருந்தான். ஏனெனில் இவன் கிறிஸ்துவுடன் இணைந்து இருப்பவன் அல்ல. கிறிஸ்துவின் நாமத்தில் பரலோகத்தின் அனைத்து வல்லமையும் செயல்படுகிறது என்றும், அவருடைய நாமத்தை விட பெரிய வல்லமை பரலோகிலும் இல்லை, பூமியிலேயும் இல்லை என்பதை இந்த மனிதன் அறிந்திருந்தான்.

சபையில் சமுதாயத்தில் நமது சொந்தத் திறமை, சாதுரியம், வரங்கள், அனுபவங்கள் மேல் நமது வாழ்வை கட்டியெழுப்பும், இந்த சத்தியம் நம்மை வழிநடத்தவில்லை. ஆனால் ஆண்டவராகிய இயேசுவின் மீது மட்டுமே நம்மைக் கட்ட வேண்டும். அவர் வல்லமையுள்ளவர், வெற்றியாளர் என்று நமக்கு உணர்த்துகிறது. உங்கள் விசுவாசம் அவருடைய வெற்றியில் நீங்கள் பங்காளிகளாகும்படி நடத்துகிறது. இயேசுவின் நாமத்தினுடைய வல்லமையை நீங்கள் உணருகிறீர்களா? இறைவனுடன் உலகத்தை ஒப்புரவாக்கிய அவருடைய இரட்சிப்பின் பணியை நீங்கள் அறிந்து அனுபவித்தது உண்டா? பிதாவாகிய இறைவனை நீங்கள் மகிழ்ச்சியுடன் ஆராதிக்கிறீர்களா? நீங்கள் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் இணைந்திருக்கிறீர்களா? அவருடைய ஆவியின் வல்லமையினால் நீங்கள் வாழ்கிறீர்களா? நமது பரலோகப் பிதாவின் நன்மையை அனுபவிக்கிறவர்கள் அவரை விட்டு விலக விரும்ப மாட்டார்கள். அவருக்கு மகிழ்ச்சியுடன் சேவை செய்கிறான். இறைவனின் ஆவியை பெற்றவன் தாமதமின்றி மக்களை நேசிக்கிறான், மன்னிக்கிறான். எல்லா நேரங்களிலும் சபை அங்கத்தினர்களுக்கு பணி செய்கிறான்.

கிறிஸ்து ஒரு முக்கியமான காரியத்தைக் கூறுகிறார் “ என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். ” (மத் 12:30)

இரண்டு கூற்றுகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை கவனிக்க வேண்டும். பிசாசுடன் இணைந்து அவர் அசுத்த ஆவிகளைத் துரத்துவதாக அவரை குற்றம் சாட்டினார்கள். அவருடன் இணைந்திராவிட்டாலும் அவருடைய நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவோரை ஆதரித்து அவர் முதலில் பேசினார். இயேசுவை எல்லா சபையினர்களையும், சமூக மக்களையும், தனிநபர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். அவர்கள் உயிருள்ள, வரப்போகிற சிலுவையில் அறையப்பட்ட இரட்சகருக்காக வாழுகிறார்கள். எனவே நமது பணியில் அவர்கள் நம்முடைய பங்காளிகள். ஆவியில் சகோதர, சகோதரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் கொள்கை ரீதியாகவும், சடங்காச்சாரங்கள், பழக்க வழக்கங்களிலும் வித்தியாசப்படலாம். உயிருள்ள கிறிஸ்துவின் நாமத்தினால் நாம் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய அன்பு நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது. சில காரியங்களில் நம்மை விட்டு வேறுபட்டிருந்தாலும் சகோதரர்களுடன் பொறுமையாய் இருக்கிறோம்.

கிறிஸ்து தமது ராஜ்யத்தின் எல்லைகளைப் பெரிதாக்குகிறார். எனவே தான் மற்றவர்களை நாம் நியாயம் தீர்ப்பதை அவர் தடுக்கிறார். இயேசுவின் சீடர்களில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுக்கிறவன், அதற்குரிய பலனை நிச்சயம் அடைவான். இருதயங்களில் ஆரம்பிக்கும் விசுவாசத்தைக் குறித்து கிறிஸ்து அறிகிறார். எளிய விசுவாசத்தையும் அவர் புறக்கணிப்பது கிடையாது. மனிதனில் உள்ள ஒவ்வொரு மெய் விசுவாசத்தையும் அவர் கனப்படுத்துகிறார். கர்த்தருடைய வழியில் செய்யப்படும் ஒவ்வொரு செயலிலும் மகிழ்கிறார். உங்கள் சபை மக்களை மட்டும் பார்க்க வேண்டாம். சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை விசுவாசிக்கும் மற்ற மக்கள் அல்லது சபையினரை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நேசியுங்கள். நாம் அனைவரும் உயிருள்ள கிறிஸ்துவில் ஒன்றாக இருக்கிறோம்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் எங்களுடைய குறைவான விசுவாசத்தைக் கண்டு வெறுத்துவிடவில்லை. எங்கள் பலவீனமான அன்பைக் கண்டு நியாயம் தீர்க்கவில்லை. உமது அழகான அன்புக்கு நேராக எங்களை இழுத்துக்கொண்டீர். உமது நேச குமாரனை அறியும்படி செய்தீர். உண்மையான விசுவாசத்தின் மூலம் ஆவிக்குரிய வல்லமையை பெறும்படி செய்கிறீர். அவருடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் அவருடைய ராஜ்யத்தை பரவச் செய்கிறார்கள். மத்திய கிழக்குப் பகுதியிலும் உலகமெங்கிலும் உள்ள சபைகளையும், கிறிஸ்தவ சமூகங்களையும் ஆசீர்வதியும். அவர்கள் உமது நாமத்தினால் இணைந்திருக்கும்படி செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. நமது சொந்த வட்டத்தில் இல்லாத மக்களுடன் இணைந்து செல்லும்படி இயேசு எவ்விதம் நம்மை நடத்துகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 03:19 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)