Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 032 (Jesus Restores a Synagogue Ruler's Daughter to Life)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
6. புயல், ஆவிகள், மரணத்தின் மீது இயேசுவின் வல்லமை (மாற்கு 4:35- 5:43)
இ) பெரும்பாடுள்ள பெண்ணை சுகமாக்கிய பின்பு, இயேசு ஜெபஆலயத் தலைவனின் மகளை உயிருடன் எழுப்பினார் (மாற்கு 5:21-43)

(i) தனது வீட்டிற்கு விரைவாக வரும்படி ஜெபஆலயத் தலைவன் இயேசுவை வேண்டிக்கொண்டான் (மாற்கு 5:21-24)


மாற்கு 5:21-24
21 இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 22 அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து: 23 என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 24 அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள்.

வியாதியின் மத்தியிலும் கிறிஸ்து தமது வல்லமையினால் நமக்கு நம்பிக்கையைத் தருகிறார். இயற்கை சீற்றங்களின் தாக்கங்கள், அசுத்த ஆவிகளின் சோதனைகள் என்று அனைத்து அழிக்கும் வல்லமைகளில் இருந்தும் இயேசு வெற்றியைத் தருகிறார். அவர் மரணத்தின் மீதும் அதிகாரம் படைத்த ஆண்டவராக இருக்கிறார். வாழ்வின் ஆதாரமாக இருக்கின்ற இறைவனைத் தவிர வேறு எவரும் இந்த பயமுள்ள ஆவியை மேற்கொள்ள முடியாது. தனது பரலோகப் பிதாவுடன் உள்ள ஐக்கியத்தை இயேசு உறுதியாய் அறிந்திருந்தார். எனவே அவரே மெய்யான ஜீவாதிபதி. அவர் நமக்கு ஜீவனுள்ள நம்பிக்கையை தருகிறார். நம்மை உயிருடன் எழுப்புவதன் மூலம் அவர் தமது மகிமையை வெளிப்படுத்துகிறார்.

எருசலேமின் பிரதான ஆசாரியர்களால் அனுப்பப்பட்டிருந்த ஒற்றார்கள் இயேசுவை கைது செய்யும்படியான உத்தரவை பெற்றிருந்தார்கள். அவரை பொய்யான தீர்க்கதரிசி என்றும் தேசத்தை தவறாக வழிநடத்துகிறவன் என்றும் அழைத்தார்கள். இந்த சூழ்நிலையில் கப்பர்நகூமில் இருந்து ஜெபஆலயத் தலைவன் இயேசுவிடம் வந்தான். அவனது மகளின் வியாதியின் நிமித்தம் குடும்பத்தார் அனைவரும் சோர்வுற்றிருந்தார்கள். மரணத்துக்கு ஏதுவாய் அந்த வியாதி இருந்தபடியால், அவன் இரட்சகரைத் தேடி வந்தான். இவன் கிறிஸ்துவின் வல்லமையையும், மகிமையையும் நம்பினான். கூட்டத்தார் மத்தியில் அவரின் பாதத்தில் விழுந்தான். இயேசு அவனைத் தடுக்கவில்லை. அவர்கள் இருவரும் ஆராதனையின் அர்த்தத்தை அறிந்திருந்தார்கள். நசரேயன் முன்பாக பொது இடத்தில் இந்த யூத விசுவாசி தாழவிழுந்து பணிந்துகொண்டான். கிறிஸ்து இறைவனுடைய குமாரன் என்பதை அவன் அறிந்திருந்தான். சாகப்போகும் தனது மகளை குணமாக்கும்படி அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். அவளது வியாதி மிகவும் முற்றிப்போயிருந்தது. கிறிஸ்து இப்படிப்பட்ட ஆராதனையை அங்கிகரிக்கிறார். ஏனெனில் இறைவன் மட்டுமே ஆராதனைக்குரியவர்.

ஜெபஆலயத் தலைவன் விழுந்து பணிந்து கொண்டதின் மூலம், இயேசுவே மெய்யான ஆண்டவர் என்பதை அறிவித்தான். எல்லா மனிதர்களாலும் ஆராதிக்கப்பட வேண்டியவர் அவர் மட்டுமே.

தனது விசுவாசத்தை வெளிப்படையாக அறிவித்த இந்த மனிதனுடன் இயேசு இணைந்து கொண்டார். அவரைத் தொடுகிற யாவருக்கும் கிறிஸ்துவின் வல்லமை பாய்ந்தோடுவதை அவன் அறிந்திருந்தான்.

பெருந்திரளான மக்கள் இந்த பெரிய அற்புதத்தை அறிந்திருந்தார்கள். ஜெபஆலயத் தலைவனின் மகளை இயேசு எவ்விதம் சுகமாக்குவார் என்று அவர்கள் ஆச்சரியத்துடன் எதிர்நோக்கியிருந்தார்கள். அவர்கள் தலைவனின் விசுவாசத்தின் மூலம் இறைஅரசைக் குறித்தும், தோராவைக் குறித்தும் அறிந்துகொண்டார்கள். எருசலேமில் இருந்து ஒற்றர்கள் வந்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் கப்பர்நகூம் ஜெபஆலயத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்பட்டால் எப்படியிருக்கும், குற்றச்சாட்டுகள், துன்புறுத்தல்கள் மத்தியில் இயேசுவின் செயல்களை பார்க்கும்படி பெருந்திரள் மக்கள் கூடியிருந்தார்கள்.

பிரியமான சகோதரனே, நீ இயேசுவிடம் விரைந்து வருவாயா? அவரைக் குறித்து அறியவும், அவருடைய வார்த்தையைக் கேட்கவும், அவருடைய பரிசுத்த ஆவியானவரைத் தேடவும், இன்று அவருடைய அற்புதங்களை அனுபவிக்கவும் அவரிடம் வருவாயா?

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் உண்மையான இறைவன். நீர் மன்னிக்கிறீர், குணமாக்குகிறீர், இரட்சிக்கிறீர், வாழ்வு தருகிறீர். நான் உம்மை ஆராதிக்கிறேன். எனது வாழ்வை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். எனது பாவங்களை மன்னியும். உயிருள்ள விசுவாசத்தை எனக்குத் தாரும். உமது ஜீவனின் அன்பில் என்னை நிலைநிறுத்தும். நான் உமது உடன்படிக்கையை விட்டு விலகாதபடி காத்துக்கொள்ளும். எல்லா மனிதர்கள் முன்பும் உமது வல்லமையை அறிவிக்க உதவும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசுவானவர் ஜெபஆலயத் தலைவன் தன்னைத் தாழ விழுந்து பணிந்தபோது ஏன் அனுமதித்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 12:33 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)