Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 026 (Jesus Explains the Parable of the Sower)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
5. கடற்கரையில் அமர்ந்திருந்த திரளான மக்களுக்கு இயேசு படவில் இருந்து பிரசங்கித்தார் (மாற்கு 4:1-34)

இ) விதைக்கிறவன் மற்றும் நான்குவித நிலங்கள் குறித்த உவமையை இயேசு விவரிக்கின்றார் (மாற்கு 4:13-20)


மாற்கு 4:13-20
13 பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்? 14 விதைக்கிறவன்வசனத்தை விதைக்கிறான். 15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள்இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள். 16 அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், 17 தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள்,வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். 18 வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றிஉண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். 19 இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். 20 வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.

கிறிஸ்துவின் வார்த்தை வல்லமையுள்ளது. இறைராஜ்யத்திற்கான அனைத்து வல்லமைகளையும் அது உள்ளடக்கியுள்ளது. கோதுமை விதை அதற்கான முழுச் செடியையும், தண்டு, வேர், இலைகள் மற்றும் அறுவடை பலன்கள் அனைத்தையும் தருவது போல, இறைவார்த்தை இரக்கம், விசுவாசம், மகிழ்ச்சி, சமாதானம், தாழ்மை, பரிசுத்தம் மற்றும் இயேசுவுக்கு அர்ப்பணித்தல் என்ற அனைத்திற்குமான வல்லமையை உள்ளடக்கியுள்ளது.

உங்கள் ஆண்டவருடைய வார்த்தைக்கு எப்போதும் திறந்த மனதுடன் இருங்கள். நீங்கள் அவருடன் நீதியின் கனியினால் நிறைந்திருங்கள். உங்கள் வளர்ச்சியையும், உயிருள்ள வார்த்தைக்கு நீங்கள் ஆழமாக ஒப்புக்கொடுப்பதையும் தடைசெய்யும்படி பிசாசு முயற்சிப்பதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். நீங்கள் வேதம் வாசித்தவுடன் அல்லது கூட்டம் முடியும்போது அவன் உங்களிடம் வருவான். இச்சைகளுக்கும், கவர்ச்சியான சோதனைகளுக்கும் நேராக அவன் உங்களை நடத்தி, வலையில் சிக்கப் பண்ணுவான். முக்கிய செய்திகளைக் கேட்பது நகரத்தின் முதன்மை செய்திகளைக் கவனிப்பது போன்றவற்றை அனுமதிப்பான். ஆகையால் மிக முக்கிய நேரமான இறைவார்த்தையைக் கேட்கும் பத்து நிமிட நேரங்களில் என்ன நிகழ்கிறது? அந்த நேரம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அந்த வார்த்தை உங்களில் உறுதிப்பட வேண்டும் என்று மன்றாடுகிறீர்களா? உங்கள் இருதயத்தில் அதை ஆழமாகப் பதிய வைக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் மாய்மாலமும், சுவையுமற்ற வார்த்தைகளினால் இதை மறந்துவிடுகிறீர்களா?

நீங்கள் அனுபவத்தை நாடுபவரா? அல்லது உங்கள் இறைவனுடைய வார்த்தையைக் குறித்த சரியான அறிவு உள்ளவரா? அநேக விசுவாசிகள் கிறிஸ்துவை மேலோட்டமாக நேசிக்கிறார்கள். அவர்கள் நித்திய வாழ்வின் ஆழங்களுக்குள் செல்வதில்லை. ஏனெனில் அவர்கள் தாங்கள் வாசிப்பதைக் குறித்தோ அல்லது கேட்பதைக் குறித்தோ சிந்திப்பதில்லை. அவர்கள் தாங்களாகவே இறைவார்த்தையை எடுத்து வாசிப்பதில்லை. நற்செய்தியின் பொக்கிஷங்களை அறிந்துகொள்ள முயற்சி செய்யாதோர் பலவீனராய் இருக்கிறார்கள். பாடுகள் மற்றும் வியாதியின் நேரத்தில் அவர்கள் சோர்ந்துபோகிறார்கள். மனம் உடைந்து போகிறார்கள். எனவே உங்களுக்குள் எந்த எதிர்ப்பு உணர்வும் வளராதபடி, பரிசுத்த வேதாகமத்தை மகிழ்ச்சியுடன் வாசியுங்கள்.

பணத்தை நேசிக்கும் விசுவாசிக்கு ஐயோ, அவன் ஆசையுடன் கரத்தில் பணத்தைப்பற்றிக் கொண்டு ஆண்டவருக்கு சேவை செய்ய முடியாது. பெரிய சம்பளம், உயர்ந்த பதவி, ஆடம்பரம் போன்றவற்றின் மீதான உங்கள் வாஞ்சையை புறந்தள்ளுங்கள். அவைகள் ஆவிக்குரிய கட்டுகளையும், மரணக்கட்டுகளையும் கொண்டு வரும். அவருடைய அன்பில் நம்பிக்கை வைப்பதன் மூலம் நீங்கள் கவலைகளை மேற்கொண்டு, கிறிஸ்துவுக்குள் தொடர்ந்து வாழமுடியும். உங்கள் இச்சைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மூடத்தனமான நடத்தைகளை விட்டு விலகுவீர்கள். பரிசுத்தமானவருக்கு மட்டும் பணி செய்வீர்கள். உங்கள் ஆண்டவரை உங்கள் வாழ்வின் அடையாளச் சின்னமாகத் தெரிந்துகொள்ளுங்கள். அதே சமயத்தில் உலகப் புகழ்ச்சியை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

பரிசுத்த ஆவியைக் குறித்த உணர்வுள்ளவன் இறைவனுக்குப் பயப்படுகிறான். தனது பாவங்களை அறிந்து, அவைகளை அறிக்கையிட்டு மனந்திரும்புகிறான். அப்பொழுது இறைவன், அவருடைய பக்கத்தில் இருந்து, பாவிக்கு இருதயத்தின் ஆழமான தீமைகளைக் காண்பிக்கிறார். தனது இருண்ட வாழ்வின் கடைசி பக்கத்தையும் திருப்புவனின் உள்ளத்தில் தனது இறை ஒளியால் புதிய இருதயத்தை உருவாக்குகிறார். இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதனாக அவனது ஆத்துமாவை புதுப்பிக்கிறார். தனது சரீரத்தில் கிறிஸ்துவின் சாயலை சுமந்திருக்கும் நன்மை மற்றும் நீதியின் புதிய படைப்பாக மாற்றுகிறார். இவை அனைத்தும் நற்செய்தியை உண்மையாய் கேட்பதைச் சார்ந்திருக்கிறது. நீங்கள் பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும் நற்செய்தியை வாசிக்கிறீர்களா? நீங்கள் அதை மகிழ்ச்சியுடன் நினைவு கூர முடியுமா? அதை பொது இடத்தில் பிரசங்கிக்க முடியுமா?

நற்செய்தியை விட்டு விலகியிருப்பவன், மற்றவர்கள் இரட்சிப்பிற்கு வழிநடத்துகிற ஆசையில் இருந்தும் விலகியிருக்கிறான். இரட்சகரிடம் தாழ்மையுடன் தனது நண்பர்களை நடத்த முயற்சிக்கிறவன் அறிவிலும், வல்லமையிலும் வளர்கிறான். உங்கள் இருதயத்தில் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்கள் மத்தியில் அதை விதையுங்கள். வேதாகமத்தை தவிர வேறொன்றின் மூலமாகவும் ஆசீர்வாதம் வராது.

சிலசமயங்களில் ஆண்டவர் கல்லான இருதயத்தை வலிநிறைந்த அழிவுகளாலும், பிரச்சினைகளாலும் நொறுக்குகிறார். கல்லான இருதயத்தை நல்ல நிலமாக மாற்றுகிறார். உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள். அவருடைய வார்த்தைக்காக அவர் உங்களை ஆனந்தப்படுத்துகிறார். இரட்சிப்பை அநேகருக்கு கொண்டு செல்லுங்கள். அப்போது நீங்கள் அதிக கனிகளைக் கொடுப்பீர்கள்.

விண்ணப்பம்: அறுவடையின் ஆண்டவரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் எல்லா மக்களுக்கும் உமது அன்பைக் கொடுத்திருக்கிறீர். உமது ராஜ்யத்தில் பிரவேசிக்கும் வாய்ப்பை கொடுக்கிறீர். கடின இருதயமுள்ளோர், பண ஆசையுடையோர் கீழான மக்கள் என்று அனைவருக்கும் சமமாக உமது வார்த்தையைக் கொடுக்கிறீர். அவர்களில் நற்கனியை எதிர்பார்க்கிறீர். எனது இருதயக் கடினம், புறக்கணிப்பு, பண ஆசையை மன்னியும். நான் நல்ல நிலமாக மாறி, அதிகக் கனியைக் கொடுக்கும்படி என் இருதயத்தை நொறுக்கும். ஆமென்.

கேள்வி:

  1. நாம் எப்படி இறை வார்த்தையைக் கடைப்பிடிக்க முடியும்?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 11:41 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)