Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 103 (Sailing From Anatolia to Lebanon)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

10. அனடோலியாவில் இருந்து லெபனோனிற்கு கப்பற் பயணம் (அப்போஸ்தலர் 21:1-6)


அப்போஸ்தலர் 21:1-6
1 நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,2 அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம்.3 சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது. 4 அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.5 அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.6 ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.

ஏதென்சு பகுதியில் இருந்து நீலநிற மத்திய தரைக்கடல் மேல் இன்று யாரெல்லாம் விமானத்தில் பயணம் செய்கிறார்களோ, அவர்கள் ரோதுதீவு மற்றும் கோஸ் தீவைக் காணமுடியும். இன்று பயணம் செய்பவர்கள் மிக நீண்ட தூரத்தை சில நிமிடங்களில் சத்தமின்றி கடந்து விடுகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பவுல் கப்பலில் பயணம் செய்த போது, அநேக வளைகுடாக்கள், சந்திப்புகள் இவைகளைக் கடந்து காற்று மற்றும் அலைகளின் மத்தியில் செல்ல வேண்டியிருந்தது.

தன்னுடன் பயணம் செய்த மற்றவர்களுடன் இயேசுவைக் குறித்த பேச போதுமான நேரம் இப்பயணத்தில் பவுலுக்கு இருந்தது. நியாயப்பிரமாணத்தின் முழுமையின் ஆழத்தை புரிந்துகொள்ளச் செய்யவும், நற்செய்தியின் விடுதலையின் வெளிச்சத்தில் அவர்களைக் கொண்டுவரவும் முடிந்தது. இந்தப் பயணத்தின் சிறப்புத்தன்மை திருச்சபையின் எதிர்காலத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆவிக்குரிய பயிற்சியாக இருந்தது. விண்ணப்பத்தில் தொடர்ந்து இணைந்திருக்கவும் முடிந்தது. அவனுடன் இணைந்து, கடலில் பயணம் செய்தவர்கள் கிரேக்கு மற்றும் அனடோலியாவின் சபைகள் தங்களுக்காக விண்ணப்பம் பண்ணுகிறதை நினைத்துப் பார்த்தார்கள். புது விசுவாசிகள் மீது அவர்கள் இல்லங்களில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்படியாக விண்ணப்பம் செய்தார்கள். கிறிஸ்துவின் அன்பின் எல்லாக் கனிகளும் அவரைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் காணப்படவேண்டும்.

சிரியாவிற்கு நேரடியாக செல்லக்கூடிய கப்பலை அப்போஸ்தலனும் அவனது உடன் பயணிகளும் கண்டபோது மகிழ்ச்சியுடன் அதனுள் ஏறினார்கள். இப்படிப்பட்ட அனுகூலமான சூழ்நிலைகள் துரிதமான கப்பற்பயணம் மேற்கொள்ளவும், பிரச்சினைகளின்றி நேரத்துடன் செல்லவும் உதவியது. அந்தியோகியாவின் தர்சுவில் அவர்கள் தங்க முடியாது அல்லது வேறுபட்ட துறைமுகங்கள் மற்றும் கடற்கரைகளில் நிற்க முடியாது. சீப்புரு தீவின் பாப்போவில் அவர்கள் நிற்க முடியாது. இருப்பினும் சில ஆண்டுகள் முன்பு இந்த அழகிய தீவில் அருட்பணி பயணத்தை பவுலும், பர்னபாவும் துவங்கிய போது, எவ்விதம் கிறிஸ்து பிசாசை மேற்கொண்டார் என்பதை நிச்சயம் தன்னுடன் பயணம் செய்தவர்களுக்கு சொல்லியிருப்பான். அற்புதமான தீவுகளில் மகிழ்ச்சியாய் தங்கியிருப்பது அவர்களது முதன்மையான குறிக்கோள் அல்ல. அவர்கள் கடினமான பாலைவன சாலைகளில் கடந்து சென்று, மக்கள் நெருக்கம் மிகுந்த தலைநகரங்களில் நற்செய்தியை பாரத்துடன் பிரசங்கித்தார்கள். ஆண்டவர் அவருடைய ஊழியக்காரர்களை இவ்விதமாக நடத்தினார்.

கி.மு.300-ல் அலெக்சாண்டர் முக்கிய பகுதியுடன் இணைத்திருந்த, ஐசுவரியமிக்க தீருப் பட்டணத்திற்கு கிறிஸ்துவின் வெற்றிப் பவனி கடந்து வந்தது. அங்கே கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குமதி பண்ணினார்கள். பவுல் தனது கூட்டாளிகளுடன் சந்தைப் பகுதிகளுக்கு சென்று, விசுவாசத்தில் இருந்த சகோதரர்களை தேடிப் பார்த்தான். கிறிஸ்தவர்கள் தீரு தீவில் எண்ணிக்கையில் மிகவும் சொற்பமாக இருந்தனர். அவர்கள் வியாபாரம் மற்றும் மீன்பிடி தொழிலில் மும்முரமாக இருந்தார்கள். அவர்களுடைய வீடுகளில் சென்று அப்போஸ்தலன் அவர்களை சந்தித்தான். அந்தப் பட்டணத்தில் ஒரு வாரம் தங்கியிருந்து, இறைவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்தான். அவர்களது உண்மையுள்ள இருதயங்களை உற்சாகப்படுத்தினான்.

அப்போஸ்தலன் தனது கடைசி பயணத்தில் மிகப்பெரிய தலைநகராகிய எபேசுவை சந்திக்கவில்லை. வேகமாய் வளர்ந்து வந்த அந்த சபையிடம் அழைப்பு கொடுக்கவில்லை. இறைவனின் உதவியோடு வேர்கொண்டு வளர்ந்தது, பரிசுத்த ஆவியின் பெலனுடன் செயல்பட்டது. இப்போது தீருவில் சீஷர்களுடன் தங்கியிருப்பதை தெரிந்துகொண்டான். அங்குள்ள சபையை அதனுடைய பலவீனத்தை மாற்றி, அதை பெலப்படுத்தும்படியாக வந்தான். அது இறைவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தது.

தீருவில் உள்ள விசுவாசிகளின் இருதயங்களில் இயேசுவில் நாம் எப்போது ஆழமாக வேரூன்றியது என்பது நமக்குத் தெளிவாக தெரியவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி ஆண்டவருடைய ஆவியானவர் தெளிவான தீர்க்கதரிசனம் மூலமாக அவர்களது இருதயங்கள் மற்றும் மனங்களில் பேசினார். எபேசுவில் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்திய அதே சத்தியங்கள் தீருவிலும் காணப்பட்டன. பவுல் எருசலேமில் மிக மோசமாக நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார். அவரது ஊழியத்தின் முடிவு காலம் நெருங்கிவிட்டது. எருசலேமில் இருந்து பவுல் செல்வதை தடைசெய்யும்படி பரிசுத்த ஆவியானவர் இந்த சத்தியத்தை பேசவில்லை. இருப்பினும் சபையின் மக்கள் உபத்திரவத்திற்குள் பவுல் போவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவன் மீது வைத்த அன்பின் நிமித்தமாக ஏற்பட்ட மனிதனுடைய வெளிப்பாடு இது. அவனுடைய பாதுகாப்பைக் குறித்த அக்கறையுடன் பேசினார்கள். ஆனால் கிறிஸ்துவின் இந்த ஊழியக்காரனோ, அவனுடைய ஆண்டவரின் கடைசி அடிகள் வரை பின்பற்றி நடக்க ஆயத்தமாக இருந்தான். கிறிஸ்துவின் வெற்றிப் பவனிக்காக மாத்திரம் பவுல் கொரிந்துவில் இருந்து எருசலேமிற்கு பயணம் செய்யவில்லை, மாறாக பாடுகள் மற்றும் உபத்திரவங்களுக்குள் கடந்து செல்லவும் அவன் பயணம் செய்தான். பவுல் மனவிருப்பத்துடன் எருசலேமிற்கு சென்றான். தன்னையே பலியாக ஒப்புக்கொடுப்பதன் மூலம் அவனுடைய ஆண்டவரைக் கனப்படுத்த ஆயத்தமானான். உண்மையான விசுவாசி உபத்திரவங்களை விட்டு ஓடிப்போக மாட்டான். அவனுக்கு சாவு என்பது ஆதாயம். இது அவரைப் பின்பற்றுபவர்களில் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படுவதன் ஓர் அடையாளம் ஆகும்.

பவுலோடும், அவனது உடன்பணியாட்களுடனும் தீரு சபையார் முழுவதும் இணைந்து கடற்கரைக்கு சென்றார்கள். அப்போஸ்தலனுடன் இணைந்து ஆண்கள், பெண்கள், அடிமைகள் மற்றும் ஆசியா, ஐரோப்பா சபைகளின் மூப்பர்கள் அனைவரும் முழங்காற்படியிட்டார்கள். சுற்றியுள்ள மக்கள் என்ன நினைப்பார்கள் என்று அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் இணைந்து விண்ணப்பம் செய்தார்கள். அப்போஸ்தலனுக்கும், அவனது கூட்டாளிகளுக்கும், தாங்கள் மறுபடியும் அவனைப் பார்க்க மாட்டோம் என்பதை உணர்ந்து பிரியாவிடை கூறினார்கள்.

விண்ணப்பம்: ஆண்டவரே உமது வழிகள் பரிசுத்தமானவை, உமது அன்பு அளவற்றது. உம்மில் நம்பிக்கை வைக்க எங்களுக்கு கற்றுத்தாரும். உமது வழிநடத்துதலைக் கொண்டு எங்களது எதிர்காலத்தை கட்ட உதவும். உபத்திரவங்களைக் கண்டு பயப்படாதிருக்கவும், உமக்காக உபத்திரவப்படுவதை விட்டு ஓடாதிருக்கவும் எங்களுக்கு உதவும். எங்களது பாவங்களை மன்னியும். எங்களை பரிசுத்தப்படுத்தும். உலகில் உள்ள உமது சபையின் ஒவ்வொரு அங்கத்தினரையும் தூய்மைப்படுத்தும்.

கேள்வி:

  1. தீருவில் பவுலின் அனுபவங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:15 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)