Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 067 (Jesus’ Authority Questioned)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)

5. யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தினால் இயேசுவின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது (மாற்கு 11:27-33)


மாற்கு 11:27-33
27 அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து: 28 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள். 29 இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். 30 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார். 31 அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார். 32 மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும்; எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி; 33 இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.

தேவாலயத்தின் ஒழுங்குகளில் கலிலேயாவில் இருந்து வந்த கிராமத்தான் ஒருவர் தலையிடுவதைக் கண்டு ஜனங்களின் மேய்ப்பர்களாக இருந்த பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; கோபப்பட்டார்கள். அவர் அதிகாரமுள்ளவராக செயல்படுவதைக் கண்டு கோபப்பட்டார்கள். அந்த அதிகாரம் இறைவனுடைய அதிகாரம் என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. அவர் தனது அதிகாரத்தை நிலைநாட்ட, அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் தன்னை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். அவர்களுடைய பகையுணர்வால் அவர்கள் குருடர்களாக இருந்தார்கள். அவர்கள் மத்தியில் அவர் இருந்தும், இறைவனுடைய ஆவியினால் பிறந்த அவரை அவர்கள் அறியவில்லை. அவருடைய வல்லமையை உணர்ந்தார்கள். ஆனாலும் அவருடைய சத்தியத்தை அறியவில்லை.

எனவே ஆச்சரியப்பட வேண்டாம். பிரியமான சகோதரனே, ஒருமதத்தலைவர் அல்லது ஒரு மதத்தை சார்ந்த மனிதன் கிறிஸ்துவை அறியவில்லை. கிறிஸ்துவின் அதிகாரத்தின் ஆதாரத்திற்கான காரணத்தை பழைய உடன்படிக்கையின் தலைவர்கள் அறியவில்லை. ஏனெனில் அவர்களுடைய இருதயங்கள் கடினப்பட்டு இருந்தன.

ஆண்டவராகிய இயேசு அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. அவர் ஞானத்துடன் அவர்களுடைய இருதய நிலையை வெளிப்படுத்தும்படி கேள்வி கேட்டார். யோவான்ஸ்நானகனுடைய போதனை மற்றும் அவன் அளித்த ஞானஸ்நானத்தின் அதிகாரம் குறித்து கேட்டார். யூதத்தலைவர்கள் வனாந்தரத்தில் கர்த்தருக்குப் பணிசெய்து, மனந்திரும்பும்படி அழைத்த யோவான்ஸ்நானகனை ஏற்கெனவே புறக்கணித்திருந்தார்கள். அவர்கள் மனந்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணினார்கள். அவனுடைய உடையைக் குறித்து பரியாசம்பண்ணினார்கள். அவர் தான் வருகின்ற ராஜாவாகிய கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தியவன் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

உண்மையான மனந்திரும்புதலை ஆண்டவர் ஏற்றுக்கொள்கிறார். நித்திய வாழ்வைப் பெறுவதற்கு மனந்திரும்புதல் அவசியமாக உள்ளது. நீ மனிதப் பாரம்பரியங்கள் மற்றும் உலகத்தின் வழிமுறைகளின்படி வாழ்கிறாயா? அல்லது மனந்திரும்புதலின் மூலம் புதிய இதயத்தை நீ பெற்றிருக்கிறாயா? பாவங்களில் இருந்து கண்ணீரோடு மனந்திரும்பி உண்மையுள்ள இரட்சகர் மீது விசுவாசம் வைத்திருக்கிறாயா?

சிலுவைக்கு அருகில் நீ வராதவரை இயேசுகிறிஸ்துவின் மகிமை உனக்கு வெளிப்படாது. அவருடைய மன்னிப்பின் கிருபையை பெற்றுக்கொள்ளவும் முடியாது. நீங்கள் அவரை நோக்கி கதறும்போது, அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுவீர்கள். நன்றி, நன்றி பிரதான ஆசாரியரே நீரே என் ஆண்டவர் என் இறைவன். நீர் என்னை, உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இறைவனுடன் ஒப்புரவாக்கியிருக்கிறீர். உமது பரலோகப் பிதாவிற்கு சொந்தமான மக்களாக நீர் எங்களை விலைக்கிரயம் கொடுத்து மீட்டிருக்கிறீர். கிறிஸ்துவின் அதிகாரத்தினுடைய ஆதாரம் உண்மையுள்ள விசுவாசிக்கு மட்டுமே தெரிகின்றது.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே உமக்கு நன்றி. நீர் இறைவனுடைய குமாரன். உமது சுதந்திரத்தை நீர் எங்களுக்கு தந்திருக்கிறீர். நாங்கள் குற்றவாளிகளாகவும், பாவத்தின் அடிமைகளாகவும் இருந்தோம். நீர் எங்கள் மீது இரக்கம் பாராட்டினீர். நீர் எங்கள் மீது பொறுமையாய் இருந்தீர். எங்களைப் பரிசுத்தப்படுத்துகிறீர். நாங்கள் உம்மை அதிகமாக அறியவும், உமது அன்பில் வளரவும் உதவிசெய்யும். நீர் யார் என்பதை மனிதர்களுக்கு சாட்சியிட உதவும். நீர் மெய்யான இறைவனிடமிருந்து வந்த மெய்யான இறைவன். ஒளியில் இருந்து வந்த ஒளி, ஒரே பேறானவர், சிருஷ்டிக்கப்படாதவர். நீர் பிதாவுடன் இருக்கிறவர், ஆமென்.

கேள்வி:

  1. யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தாருக்கு தனது அதிகாரத்தின் ஆதாரத்தைக் குறித்து இயேசு ஏன் அறிவிக்கவில்லை?

www.Waters-of-Life.net

Page last modified on August 18, 2021, at 04:31 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)