Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 020 (Gathering of the Multitudes)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

1. பெருந்திரள் மக்கள் ஒன்றுகூடுதல் (மாற்கு 3:7-12)


மாற்கு 3:7-12
7 இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப் போனார். 8 கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து,அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின்திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக்கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள். 9 அவர் அநேகரைச்சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத்தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள். 10 ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். 11 அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. 12 தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

மதப்போதகர்களை விட்டு கிறிஸ்து வேறுபக்கமாகச் சென்றார். மதவெறிமிக்க மாய்மாலக்காரர்களை விட்டுவிலகிச் சென்றார். சாதாரண எளிய மக்கள் பெருந்திரளாக அவரைப் பின்பற்றினார்கள். அவர்கள் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தார்கள். கலிலேயா மலைப்பகுதியின் வடபுறம், தென்புறம், நியாயப்பிரமாண சட்டத்தின் பிறப்பிடமாகிய யூதேயா மற்றும் தேவாலயச் சடங்குகளின் மையம் எருசலேம், யூதர்களின் உயர் நீதிமன்ற உறுப்பினர்கள் என்று அநேகர் நாசரேத்தூர் வாலிபனையும், அவரைச் சுற்றியிருந்த திரள் கூட்டத்தையும் கவனித்தார்கள். இதுமேயாவிலிருந்து சிலர் வந்தார்கள். அது ஏரோது ராஜாவின் குடும்பத்தினுடைய சொந்த ஊராக இருந்தது. அவன் யூத தேசத்துக்கு அந்நியனாக இருந்தான். மற்றவர்கள் மேற்குப்பக்கம் இருந்து வந்தார்கள். சர்வதேச வியாபாரிகள் வந்தார்கள். இயேசுவில் வெளிப்பட்ட இறைவனுடைய வல்லமையை அனுபவிக்க வந்தார்கள். யோர்தானுக்கு அப்பால் கிழக்குப்பகுதியில் இருந்தும் மக்கள் அவருடைய கனிவான வார்த்தைகளைக் கேட்க வந்தார்கள். தங்களது வியாதிகளில் இருந்து சுகம்பெற வந்தார்கள். தேசத்தின் எல்லாப்பகுதிகளிலும் இருந்து பெருந்திரளான மக்கள் அவரைத் தொட முயற்சித்தார்கள். அவருடைய சரீரத்தில் இருந்து இறைவனுடைய வல்லமை பாய்ந்தோடியது. கூட்டம் அதிகரித்தது. அவரைச் சுற்றிலும் நெருக்கி வந்தார்கள். எனவே அவர் படவில் ஏறிச்சென்றார். கரையில் கூட்டம் அதிகமாய் இருந்தது. அவருக்காக ஆயத்தம் பண்ணியிருந்த படவில் ஏறி அமர்ந்து அவர்களுக்கு பிரசங்கம் பண்ணினார்.

நரகம் நடுங்கியது, அதிர்ந்தது. கிறிஸ்து எவ்விதம் பாடுபடுகின்ற, அடிமைப்பட்ட மக்களை சாத்தானுடைய கையில் இருந்து பறித்தார் என்பதை அவன் கண்டான். சாத்தானின் தூதர்களும் கிறிஸ்துவின் சுபாவத்தை அறிந்திருந்தன. பயத்துடன் அறிக்கையிட்டு அவரை ஆராதித்தன. “நீர் இறைவனுடைய குமாரன்”.

அவைகள் அறிக்கையிட்டதற்கான காரணத்தையும், நோக்கத்தையும் தரவில்லை. கிறிஸ்துவின் வல்லமை சாத்தானை தூக்கி எறிந்தன. அவைகளின் அசுத்தங்களை அவருடைய பரிசுத்தம் கடிந்துகொண்டது. கிறிஸ்து நரகத்தின் சப்தங்களை தடுத்தார். அவருடைய பரிசுத்தத்தைக் குறித்த பயத்தினால் அல்ல, மாறாக அவர் மனிதர்களின் விசுவாசத்தை அவருடைய இரக்கத்தின் அன்பினால் கட்டியெழுப்பினார். பரிசேயர்கள் எதை விசுவாசிக்க விரும்பவில்லையோ அதை நரகம் உணர்ந்துகொண்டது. தீயவன் மிகத் தெளிவாக இயேசுவைக் குறித்த சத்தியத்தை அறிந்திருந்தான். மதவெறியர்களை அவர் மீது ஏவிவிட்டான். அவர்கள் மதத்தின் பெயரால் இறைவனின் குமாரனை அழிக்கும்படி செயல்பட்டான்.

விண்ணப்பம்: ஆண்டவரே, நீர் அன்புள்ளவர். உம்மை நம்பி வந்தவர்கள் அனைவரையும் நீர் குணமாக்கினீர். உமது பெருந்தன்மை, உமது அன்பின் கிருபையை எங்கள் குடும்பங்கள், நாடு பெற்றுக்கொள்ளட்டும். நீர்இல்லாமல் நாங்கள் பகையுடனும், அசுத்த ஆவிகளுடனும் போராடுகிறோம். எங்களை நீர் காத்துக்கொள்ளும். எங்கள் எதிரிகளை நாங்கள் புறக்கணியாதபடி அவர்களை நேசிக்க உதவும். ஒவ்வொருவருக்கும் சேவை செய்ய உதவும். உமது அற்புதமான பொறுமையினால் எங்கள் கசப்புகள் அனைத்தையும் நீர் சுமந்தீர். ஆமென்.

கேள்வி:

  1. எந்தப் பகுதிகளில் இருந்து இயேசுவிடம் பெருந்திரள் மக்கள் வந்தார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 10:27 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)