Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 006 (Summary of the Title)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள் (மாற்கு 1:1-13)
1. மாற்கு நற்செய்தியின் தலைப்பு மற்றும் சின்னம் (மாற்கு 1:1)

உ) மாற்கு நற்செய்தியின் தலைப்பைக் குறித்த தொகுப்பு


மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தி நூலை துவங்கும் போது, முதல் ஐந்து வார்த்தைகளால் பரலோகத்தின் திரையை விலக்குகின்றார். அவர் நமக்கு ஓர் நினைவுச் சின்னத்தையும், தனது செய்தியின் தொகுப்பையும் தருகிறார். நற்செய்தியின் மற்ற வார்த்தைகளெல்லாம் இதனுடைய விளக்கமாக அமைந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து என்ற நபரைக் குறித்த அறிக்கையை சம்பவங்களை விளக்கப்படுவதன் மூலம் வாசகர்கள் சரித்திரப்பூர்வமான உண்மையின் மூலம் கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறித்து முடிவிற்கு வரும்படி செய்கிறார்.

யூதர்களையும், ரோமர்களையும் வெறுப்படையச் செய்யும் வார்த்தைகளைக் கொண்டு மாற்கு தனது நற்செய்தியை ஏன் ஆரம்பிக்கிறார்?

ரோமில் உள்ள நாடு கடத்தப்பட்ட யூதர்களுக்கும் ரோம அரசில் உள்ள விக்கிரக ஆராதனைக்காரர்களுக்கும் நற்செய்தியாளர்கள் நற்செய்தி கூற விரும்பினார்கள். ஒரு நபரில் நாம் அனுபவிக்கும் உண்மையான சரித்திர நிகழ்வுகள் தத்துவமோ அல்லது பொய்யோ அல்ல. அது உண்மையான சத்தியம். என்ன நிகழ்ந்தது என்பதைத் தவிர வேறு எதையும் என்னால் எழுத இயலாது. இயேசு தமது விவரிக்க முடியாத சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நமது ஆத்துமாக்களை நிரப்புகிறார். நமது சிந்தனையின் மையமாகவும், நமது விசுவாசத்தின் அஸ்திபாரமாகவும், நமது சாட்சியின் வல்லமையாகவும் அவர் மாறுகிறார்.

ரோமில் உள்ள யூதர்களுக்கு தன்னுடைய ஆரம்ப வார்த்தைகளில் மாற்கு பதிலளிக்கிறார்: உங்கள் பிதாக்கள் நாசரேத்தூர் இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக அறிந்திருக்கவில்லை. அவர்கள் அறியாமல் அவரைக் கொலை செய்தார்கள். எனவே இரட்சிக்கப்படும் படி மனந்திரும்பி விசுவாசியுங்கள். யூதர்களின் பார்வையில் பேதுருவும், மாற்குவும் கல்லெறியப்பட வேண்டியவர்களாக இருந்தார்கள்.

விக்கிரகாராதனைக் கூட்டத்தாருக்கு நற்செய்தியாளர் தனது ஆரம்ப வார்த்தைகளில் கூறுகிறார்: “உங்கள் விக்கிரகங்கள் மற்றும் தெய்வங்கள் எல்லாம் பொய்யானவை. அவைகள் ஏமாற்றும், பொய்யான கற்பனையும் ஆகும். சீஷரை தெய்வமாக வழிபடும் உங்கள் ஆராதனையும் தவறானது ஆகும். இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறொரு இறைவனின் குமாரன் இல்லை. உயிருடன் எழுந்த நமது உயிருள்ள ஆண்டவர் என்றென்றும் ஆளுகின்றார். இது உண்மையும், நிச்சயமும் ஆனது.

இந்த இறை உண்மையை தனது வாசகர்களுக்கு படிப்படியாக மாற்கு விவரிக்க விரும்பவில்லை. மாறாக அதை வாதிடும் முறையில் விவரிக்கிறார். ஆனாலும் சத்தியத்தின் சத்ததத்தை சத்தியத்தைச் சார்ந்தவர்கள் கேட்பார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.

இயேசுவின் வாழ்வை கவனமாகப் படியுங்கள். அவர் ஆண்டவர்தான் என்ற நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்.

கேள்வி:

  1. Why did Mark the evangelist open his gospel with these words?

www.Waters-of-Life.net

Page last modified on August 13, 2021, at 07:33 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)