Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 112 (The Heavenly King Reigns Through His Apostles)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 9 - இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் (மாற்கு 16:1-20)

9. பரலோக ராஜா தமது அப்போஸ்தலர்கள் மூலம் ஆளுகை செய்கிறார் (மாற்கு 16:19-20)


மாற்கு 16:19-20
19 இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

கிறிஸ்து புவிஈர்ப்பு விசையை மேற்கொண்டார். அவருடைய சீஷர்களின் கண்களின் முன்பாக பரமேறிச் சென்றார். இன்னொரு உலகிற்குள் அவர் பிரவேசிப்பதற்கான அடையாளமாக இது காணப்பட்டது. தமது முழு இருதயம், முழு ஆத்துமா, முழுப் பெலத்தோடு பரலோகப் பிதாவை அவர் நேசித்தார். அவர் உலகிற்கான இரட்சிப்பின் பணி, தமது போதனைப் பணியை முடித்த பின்பு, பிதாவிடம் திரும்பிச் சென்றார். அவர் தமது திருச்சபைக்கு மிகப்பெரிய ஆசீர்வாதத்தை கொடுப்பதற்காக தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை காணிக்கையாக பரிசுத்த ஸ்தலத்தில் படைக்கும்படி கிருபாசனம் முன்பாக பிரவேசித்தார். மாம்சமான யாவர் மீதும் அவர் பரிசுத்த ஆவியைப் பொழிந்தருகிறார்.

இயேசு தமது அனுபவங்களின் மூலம், அவருடைய சீஷர்கள் ஆவியானவரின்றி தங்கள் மனங்களில் ஒளியூட்டப்பட முடியாது என்பதை அறிந்திருந்தார். அன்பு, விசுவாசம் இவற்றை நடைமுறைப்படுத்த அவர்கள் பெலனின்றி காணப்பட்டார்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இன்றி நம்பிக்கை கிடையாது.

அவர் பிதாவிடம் அன்பின் ஐக்கியத்தில் நிலைத்திருக்கும்படி பரமேறிச்சென்றார். இறைவனுடைய அன்பின் ஆதாரம் அவர். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கும்படி தம்மைப் பின்பற்றுவோரின் இருதயங்களில் அன்பைப் பெருகப்பண்ணுகிறார்.

தாவீது ராஜா முன்னுரைத்தான்: “கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். ” (சங்கீதம் 110:1). இயேசு பரமேறியபோது இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. பிதா குமாரனை மகிமைப்படுத்துகிறார். தமது வலதுபாரிசத்தில் அமரச் செய்தார். எந்தவொரு மனிதனும், தூதனும் செய்ய முடியாததை கிறிஸ்து நிறைவேற்றினார்.

அவருடைய இரத்தத்தின் மூலம் தீய உலகை பரிசுத்த இறைவனுடன் ஒப்புரவாக்கினார். பரலோகத்திற்குள் இறைஆட்டுக்குட்டியானவர் பிரவேசித்து, அவருடைய சிம்மாசனம் அருகே வந்த போது, பரிசுத்தவான்களின் துதிப்பாடல்கள் நிறைந்து காணப்பட்டது. “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.”

இன்று உலகின் ராஜாவாக கிறிஸ்து இயேசு இருக்கிறார். அவர் தமது சபையின் மூலமாக ஆளுகை செய்கிறார். மரணத்துக்கேதுவான ஆயுதங்களினால் அல்ல, அவர் ஆவிக்குரிய ராஜ்யத்தை தமது அன்பினால் ஸ்தாபிக்கிறார். அவர் நமக்காக விலைக்கிரயம் செலுத்தியுள்ளார். நாம் அவருக்குச் சொந்தமானவர்கள். அவர் நமது எஜமானர். அவருடைய ராஜ்யம் பூமிக்குரியது அல்ல. அவர் அழிந்துபோகும் பொக்கிஷங்களை நமக்கு கொடுப்பதில்லை. அவருடைய ராஜய்ம் நிலைத்திருக்கும்.

உனது நண்பர்கள், குடும்பம், அயலகத்தார் மத்தியில் பணி செய்யும்படி கிறிஸ்து உன்னை அழைத்திருக்கிறார். அவசரப்பட வேண்டாம். உனது சொந்த பெலத்தில் செயல்பட முயற்சிக்க வேண்டாம். ஆண்டவர் செயல்படும்படி அவரிடம் கேள். நீ அவருடைய அன்பின் கரத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட கருவியாக செயல்பட ஒப்புக்கொடு. உன்னையும், உனது வரங்களையும் முழுமையாக இயேசுவிற்கு அர்ப்பணித்துவிடு. அப்போது அற்புதங்களை நீ காண்பாய். அது உனக்கு மகிமையைக் கொண்டு வராது. உன்னைப் பிரபலமாக்காது. உனது ஆண்டவருக்கு மகிமையைச் சேர்க்கும். உனது மீட்பருக்கு கனத்தைக் கொண்டுவரும்.

ஆண்டவருடைய ஊழியர்கள் தங்களுக்கு மகிமையைத் தேட மாட்டார்கள். இயேசுவிற்கே அனைத்து மகிமையையும் செலுத்துவார்கள். அவர்களுடைய பலவீனத்தில் வெளிப்படும் அவருடைய வல்லமையை அறிந்திருக்கிறார்கள். அவர்களுடைய இரட்சிப்பு, தொடங்கி, அவர்களுடைய ஊழியம் அனைத்தும் இயேசுவினால் மட்டுமே நிகழ்கிறது. இயேசுவே எல்லாக் கிருபைக்கும் ஊற்றானவர். மந்திரமோ அல்லது பில்லிசூனியமோ அல்ல, கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு அவருடைய வார்த்தை வல்லமையை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் வார்த்தைகளை மனனம் செய்துகொள். உனது இருதயத்தில் விண்ணப்பத்துடன் அவைகளைச் சொல். நீ ஆவியில் ஐசுவரியவானாகி, அநேகருக்கு ஆசீர்வாத்தைக் கொண்டு செல்.

விண்ணப்பம்: ஆண்டவரே, நீரே என் ராஜா, என் எஜமான், என் ஆண்டவர். நீர் நித்தியத்தில் வாழ்கிறீர், ஆளுகை செய்கிறீர். எங்களை நீதிமானாக்கினீர், உம்முடன் எங்களை இணைத்தீர். உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் பாவ அடிமைச் சந்தையில் இருந்து எங்களை விலைகொடுத்து வாங்கினீர். உமக்கு சொந்தமாக்கினீர். உமக்குப் பணி செய்யவும், உம்மை நேசிக்கவும், அனைவரையும் மன்னிக்கவும் உமது அன்பின் தூதுவர்களாக எங்களை மாற்றினீர். உமது பரிசுத்த ஆவியை எங்களுக்குத் தாரும் விசுவாசத்துடன் கீழ்ப்படியவும், துன்பநேரங்களில் விண்ணப்பத்தில் நிலைத்திருக்கவும் உதவி செய்யும். பூமியில் உமது சித்தம் செய்யப்படுவதாக. நாங்கள் கிருபையின் காலத்தில் வாழ்வதை எண்ணி உம்மை துதிக்கிறோம். உமது அறுவடை மிகுதி. எனவே அர்ப்பணிப்புள்ள, தாழ்மையுள்ள, கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரர்களை எங்கள் தேசத்தின் எல்லாப் பட்டணங்களுக்கும், கிராமங்களுக்கும் அனுப்பும். அவர்கள் அறியாத இடங்களுக்கும் நீர் அவர்களை அனுப்பும். தகுதியற்ற என்னையும் பயன்படுத்தும். உமது நாமத்தை மகிமைப்படுத்தி வாழவும், உமது வார்த்தையை வார்த்தையினாலும், செயலினாலும், விண்ணப்பத்தினாலும் பரவச் செய்ய உதவும். ஆமென்.

கேள்வி:

  1. கிறிஸ்து இன்று என்ன செய்கிறார்?

கேள்விகள் - 5

பிரியமான வாசகரே,
நற்செய்தியாளர் மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்த நான்காவது பாடத்தை நீங்கள் கவனமாகப்படித்தால், பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் எளிதில் பதிலளிக்க முடியும். 22 கேள்விகளில் 18 க்கு சரியான பதில் அளித்தால், மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியை கவனமாகப் படித்ததற்காக நீங்கள் பரிசாக ஒரு சான்றிதழ் பெற்றுக்கொள்வீர்கள்.

  1. இயேசுவை கைது செய்த நிகழ்வில் உங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பகுதி எது?
  2. யூதர்களின் ஆலோசனைச் சங்கம் முன்பு இயேசு அளித்த பதிலின் அர்த்தம் என்ன?
  3. எவ்விதம் பேதுரு படிப்படியாக நொறுக்கப்பட்டான்?
  4. இயேசு தம்மை ராஜா என்று அறிக்கையிட்டதின் முக்கியத்துவம் என்ன?
  5. ரோமப் போர்ச்சேவகர்கள் எவ்விதம் இயேசுவை துன்புறுத்தினார்கள்? அவர்களுடைய பரியாசத்திற்கு அவர் எப்படி பதிலளித்தார்?
  6. இயேசு சிலுவையை சுமந்ததின் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
  7. இயேசு எப்படி சிலுவையிலறையப்பட்டார்?
  8. “யூதர்களின் இராஜா” என்ற தலைப்பின் அர்த்தம் என்ன?
  9. ஏன் தலைவர்களும், மக்களும் இயேசுவை சிலுவையில் இருந்து இறங்கிவரும்படி கூறினார்கள்?
  10. சிலுவையிலறையப்பட்டவரின் வார்த்தைகளின் அர்த்தம் என்ன: “என் தேவனே, என் தேவனே, நீர் ஏன் என்னைக் கைவிட்டீர்?”
  11. இயேசுவின் மரணத்தின் போது நிகழ்ந்த சம்பவங்கள் என்ன பொருள் தருகின்றன?
  12. சிலுவையின் போது அங்கு அநேக பெண்கள் காணப்பட்டதின் முக்கியத்துவம் என்ன?
  13. இயேசு அடக்கம்பண்ணப்பட்ட செயலில் அற்புதமான காரியம் என்ன?
  14. கல்லறை வாசலில் இருந்த கல் புரட்டிப்போடப்பட்டதின் முக்கியத்துவம் என்ன?
  15. தூதன் பெண்களுக்கு விவரித்துக் கூறிய அடிப்படைக் காரியங்கள் என்ன?
  16. மகதலேனா மரியாளுக்கு இயேசுகிறிஸ்து ஏன் முதலில் காட்சியளித்தார்?
  17. ஏன் சீஷர்கள் இயேசுவின் மரணத்தைப் புரிந்துகொள்ளாமலும், அவருடைய உயிர்த்தெழுதலை விசுவாசியாமலும் இருந்தார்கள்?
  18. உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களுடனான தமது முதல் சந்திப்பில் இயேசு ஏன் அவர்களைக் கடிந்துகொண்டார்?
  19. உலகிற்கு நற்செய்தியை அறிவிக்க அப்போஸ்தலர்களுக்கு இடப்பட்ட கிறிஸ்துவின் கட்டளையின் அற்புதமான காரியங்கள் என்ன?
  20. எவ்விதம் இரட்சிப்புடன் விசுவாசம் இணைக்கப்படுகிறது?
  21. கிறிஸ்துவினுடைய அன்பின் செயல்கள் எப்படி விசுவாசிகள் மூலமாக இன்று வெளிப்படுகின்றன?
  22. கிறிஸ்து இன்று என்ன செய்கிறார்?

தயவுசெய்து உங்கள் முழுப்பெயர், முகவரியை தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் பதில்களை பின்வரும் முகவரிக்கு அனுப்புங்கள்:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 03:13 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)