Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 079 (The Antichrist is a False Savior)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

6. அந்தி கிறிஸ்து ஒரு பொய்யான இரட்சகன் (மாற்கு 13:21-23)


மாற்கு 13:21-23
21 அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள். 22 ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 23 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

சமாதானத்தை ஏற்படுத்துகிறவர்கள் கலகம், யுத்த காலத்தில் தங்களுடைய வலது கரத்தில் ஒலிவ மரக்கிளையை ஏந்தி வருவார்கள். அவர்களுடைய இடது கரத்தில் துப்பாக்கி இருக்கும். சிலர் வேலைக்காரர்களுக்கான பகுதியை பெறுகிறார்கள். மற்றவர்கள் சமாதான வீட்டை அடைகிறார்கள்.

ஆயுதங்கள், பொக்கிஷங்கள், எண்ணெய், அணு ஆயுதங்களை ஒழிக்க முற்படுவார்கள். அவர்கள் ஆவிகளுடன் தொடர்பு கொள்வார்கள். அற்புதங்களை நிகழ்த்துவார்கள். பெருந்திரளான மக்கள் அவர்களை பின்பற்றுவார்கள். அவர்களுக்கு கற்பனையான ஒரு செழிப்புள்ள நித்திய சமாதானம் வாக்குப்பண்ணப்படும்.

எல்லோரும் நிச்சயம் பொய் சொல்வார்கள். எல்லோரும் கடந்துபோவார்கள். நமது பூமியை அழிக்கக்கூடிய ஹைட்ரஜன் அணுகுண்டுகள் தயார் நிலையில் மேற்கிலும், கிழக்கிலும் அதிகாரவர்க்கத்தினர் வைத்திருக்கிறார்கள். தூய தண்ணீர் என்பது கிடைக்காமல் போய்விடும். அது அபூர்வமானதாகவும், பெட்ரோலைவிட பிரியமானதாகவும் மாறிவிடும். அநேக காரணங்களினால் நதிகளின் நீர் மாசுபடுவது அதிகரித்துள்ளது.

ஏழைகளின் வெறுப்பு பணக்கார நாடுகள் மீது அதிகரிக்கும். அவர்கள் கிறிஸ்துவின் மீதான விசுவாசம் தங்களை விடுதலை செய்யும் என்ற ஆசீர்வாதமான நற்செய்தியை அறியவோ அல்லது உணரவோ இல்லை. அது சுய நலத்திலிருந்து விடுவிக்கிறது. வேறுபடுத்தி பார்க்கும் நிலையை மாற்றுகிறது. பகையினாலும், அழிவினாலும் இந்த உலகம் மூழ்கிப்போகும்.

உலக முடிவிற்கு சற்று முன்பு அந்திகிறிஸ்துவும், அவனுடைய திறமைமிக்க தீர்க்கதரிசியும் (ஒரு வேளை ஆபிரகாமின் சந்ததியில் வந்தவனாக இருக்கக் கூடும்) தோன்றுவார்கள். அவர்கள் வசீகரிக்கும் வார்த்தைகள், அற்புதமான வல்லமையினால் மக்களை ஈர்ப்பார்கள். அவர்களுக்கு இரத்தம் சிந்தும் யுத்தங்கள் மூலம் சமாதானத்தை கொண்டு வருவார்கள். எல்லா மதங்களையும் ஒன்றிணைப்பார்கள். அந்தி கிறிஸ்துவுக்கு முற்றிலும் தலைவணங்கும்படி நிர்பந்திப்பார்கள்.

பிசாசானவன் இயேசுவிற்கு உலகத்தின் சகல ராஜ்யங்களையும், அவைகளின் மகிமையையும் காண்பித்துக் கூறினான். “நீ என்னை தாழ விழுந்து பணிந்துகொண்டால் இவைகளையெல்லாம் நான் உமக்குத் தருவேன்”.

எச்சரிக்கையாயிருங்கள். கடைசி நாட்களில் சில தலைவர்கள் மக்களை வஞ்சிப்பார்கள். பொய்யான தீர்க்கதரிசியுடன் தோன்றுவார்கள். சாத்தானின் மகன் இறங்கி வருவான். சாத்தானுடைய தீர்க்கதரிசியுடன் தன்னை இணைத்துக்கொண்டு அசுத்தமான திரியேகத்தை காண்பிக்க நினைப்பான். இறைவனுக்கு எதிராகவும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கும் எதிராகவும் மக்களை திரட்டுவான். அவர்கள் நித்தியமானவருக்கு எதிராகப் போரிடுவார்கள்.

இன்றைய நவீன தொழில் நுட்பத்தினால் பூமியில் உள்ள எல்லா மக்களையும் ஆளுகை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நமது நாட்களில் அதிகமாகியுள்ளன. அவனுடைய கட்டளைகள், வழிகாட்டுதல்கள் எல்லா மொழிகளிலும் உடனடியாக தொலைக்காட்சி மூலமாக கேட்கும். யாரும் செல்ல முடியாத இடங்களில் உள்ள வீடுகள், வனாந்தரங்கள் போன்ற பகுதிகளாக இருந்தாலும் சரி, அவனுடைய ஆவியை எதிர்ப்பவர்கள் துன்புறுத்தப்படுவார்கள்; அழிக்கப்படுவார்கள் (2 தீமோ 2:1-12; வெளி 13:1-15).

எப்படியிருப்பினும் அந்த சூப்பர்மேன் அந்திகிறிஸ்துவினுடைய நாட்கள் குறைக்கப்படும். அவனுடைய வருகை இந்த மனுக்குல வரலாற்றின் முடிவு அல்ல. மகிமையுடன் வருகின்ற கிறிஸ்துவின் வருகை தான் இந்த உலகத்தின் முடிவு. இறைவனுடைய ஞானம் தீமையானது செழித்தோங்கவும், எல்லா தீய வழிகளும் பெருகிடவும் அனுமதிக்கிறது. நல்லவரான கிறிஸ்து வருவார். இறுதி நியாயத்தீர்ப்பில் தமது அன்பின் பூரணத்தைக் காண்பிப்பார். (தானி 7:9-14). ஒவ்வொரு மனிதனும் இந்தப் போராட்டத்தில் பங்கு பெறுவான். நாம் முழுமையான துன்மார்க்கர்கள் அல்லது முழுமையான நீதிமான்களாக மாறுவோம். ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயை ஆண்டவர் ஏற்கமாட்டார். இறைவனுடைய பரிசுத்த ஆடுகளாக நம்மை மாற்றும்படி அவர் விரும்புகிறார். அவருடைய குமாரன் கூறுகிறார். “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்”. புரட்சி, கலகம் இவற்றிற்கான அழைப்பை இந்த சிந்தனை தடைசெய்கிறது. அவர்கள் அந்திகிறிஸ்துவின் மூலம் தங்களுடைய உரிமைகளை அடைய விரும்புகிறார்கள். அவர்கள் நிச்சயம் தோற்றுப்போவார்கள்.

இருப்பினும் இறைவனுடைய தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியானவரும், அவரைப் பின்பற்றுபவர்களும் தொடர்ந்து வாழ்ந்திருப்பார்கள்.

விண்ணப்பம்: எங்கள் நித்தியமான ஆண்டவரே, அந்திகிறிஸ்துவின் ஆவியைப் பகுத்தறியும்படியான ஞானத்தை எங்களுக்குத் தாரும். அவன் உமது மனுவுருவாதலை மறுதலிக்கிறான். ஐசுவரியம், எளியவழி, செழிப்பு இவைகளை நாடாமல் உமது தாழ்மை, மனரம்மியம், சேவை செய்யும் ஆவி, சாந்த குணத்தை அடைய உதவி செய்யும். வஞ்சிக்கும் ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றும். பொய்யின் பிதாவை உம்முடைய சத்திய ஆவியால் நாங்கள் மேற்கொள்ள உதவும். ஆமென்.

கேள்வி:

  1. அந்திகிறிஸ்துவின் குணாதிசயங்கள் என்ன? அவனுடைய வருகைக்கான அடையாளங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 07:51 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)