Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 057 (Jesus Blessed the Children)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)

10. இயேசு சிறுபிள்ளைகளை ஆசீர்வதித்தார் (மாற்கு 10:13-16)


மாற்கு 10:13-16
13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். 14 இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. 15 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 16 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

கிறிஸ்து இறைவனின் ராஜ்யத்தைக் கட்டுகிறார். தத்துவஞானிகள், இறையியலாளர்கள், முதல் இடம் வசிக்கும் வேதபாரகர்கள் ஆகியோரைக் கொண்டு அவர் இதைச் செய்யவில்லை. அவருடைய ராஜ்யம் எளியவர், சிறியவர்களுக்கு உரியது. இது பெரியவர்களுக்கும், கடினவேலை செய்யும் தாய்மார்களுக்கும் மட்டும் உரியது அல்ல. இது இறைவனின் அன்பை ஏற்கும் அனைவருக்கும் உரிய ராஜ்யம். இது அறிவு, மனம் மற்றும் பகுத்தறிவிற்கு மட்டும் உட்பட்டது அல்ல. இது இருதயங்கள், சித்தம் மற்றும் உணர்வுகளையும் உள்ளடக்கியது ஆகும்.

கிறிஸ்து இறைவனின் ராஜ்யத்தைக் கட்டுகிறார். தத்துவஞானிகள், இறையியலாளர்கள், முதல் இடம் வசிக்கும் வேதபாரகர்கள் ஆகியோரைக் கொண்டு அவர் இதைச் செய்யவில்லை. அவருடைய ராஜ்யம் எளியவர், சிறியவர்களுக்கு உரியது. இது பெரியவர்களுக்கும், கடினவேலை செய்யும் தாய்மார்களுக்கும் மட்டும் உரியது அல்ல. இது இறைவனின் அன்பை ஏற்கும் அனைவருக்கும் உரிய ராஜ்யம். இது அறிவு, மனம் மற்றும் பகுத்தறிவிற்கு மட்டும் உட்பட்டது அல்ல. இது இருதயங்கள், சித்தம் மற்றும் உணர்வுகளையும் உள்ளடக்கியது ஆகும்.

இயேசு இறை அழைப்பைப் புரிந்துகொண்ட பெரியவர்களுடன் மட்டும் தான் தொடர்புகொள்வார் என்று சீஷர்களும் எண்ணினார்கள். எனவே சிறுபிள்ளைகளுடன் வந்த தாய்மார்களை அவர்கள் தடை செய்தார்கள். அமைதியான நேரத்திற்கு குழந்தைகளின் அழுகை சத்தம் குந்தகம் விளைவிக்கும் என நினைத்தார்கள்.

இயேசு இந்த மனப்பான்மையைக் குறித்த வேதனைப்பட்டார். அவர் தனது கோபத்தைக் காண்பித்தார். இறைவனின் அரசு என்பது அறிவுப்பூர்வமாக மட்டுமல்ல இருதயத்திலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் இயற்கையாகவே தனது பெற்றோர்களை நேசிக்கிறது. அதற்கான காரணம் அதற்குத் தெரியாது. ஆனாலும் எல்லா நேரங்களிலும் அவர்களை நம்புகிறது. அவர்களுடைய பராமரிப்பு மற்றும் அன்பை அது உணருகிறது. அது கவலைப்படுவது கிடையாது. அது தன்னையே தனது பெற்றோர்களின் கரங்களில் ஒப்படைத்துள்ளது. இது தான் விசுவாசத்தின் அர்த்தம் ஆகும். இறைவனை நம்புவது, நமது பரலோகப் பிதாவை எல்லா நேரங்களிலும் நம்புவது, நமது இருதயத்தில் பாதுகாப்பை உணருவது, மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி செலுத்துவது ஆகும்.

பிரியமான நண்பர்களே, பிள்ளைகளை உடையவர்களே, சிறுபிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பு மற்றும் வல்லமையை கற்றுத்தாருங்கள். கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களிடம் பேச வேண்டாம். அவர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாது. நினைவில் வைத்திருக்க முடியாது. நீங்கள் நற்செய்தியில் வாசிக்கின்ற இறைவனுடைய குமாரனின் இரக்கத்தை அவர்களுக்கு காண்பியுங்கள். துதியின் பாடல்களைப் பாடுங்கள். அவர்களுடன் விளையாடுங்கள். அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். கிறிஸ்து அவர்களை கரங்களில் ஏந்தியது போல, அவர்களை ஏந்தி, ஆசீர்வதியுங்கள். மகிழ்ச்சி என்பது இயேசுவின் ஆவிக்கு மிகத் தெளிவான சாட்சி ஆகும். இறைஅன்பு என்பது இருதயத்தைத் திறக்கும் சாவி ஆகும். சிறுபிள்ளைகளின் மனங்கள் முதிர்ச்சியற்ற நிலையில் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் விரைவில் இரண்டு பொக்கிஷங்களை புரிந்துகொள்வார்கள். மகிழ்ச்சி மற்றும் அன்பு.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது நேச குமாரன் எங்கள் உலகில் வாழ்ந்தார். அவரும் உமது பராமரிப்பின் கீழ் குழந்தையைப் போல இருந்தார். அவர் உம்மை சார்ந்து வாழ்ந்தார். எங்களை மன்னியும். எங்கள் இருதயங்களில் உம்மைச் சார்ந்து வாழ உதவும். உமது அன்பின் மகிழ்ச்சியைக் காண எங்கள் மனங்களைத் திறந்தருளும். நாங்கள் உமது பிள்ளைகளாக வாழ உதவும். உமது இரட்சிப்பை விசுவாசித்து, மாற்றமடையவும் சிறுபிள்ளைகளுக்கு ஞானத்துடன் சேவை செய்யவும், அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாகத் திகழவும் உதவி செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. சிறு பிள்ளைகளைக் குறித்த இயேசுவின் நிலைப்பாடு என்ன?

மனன வசனம்:
இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில்
வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்;
தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

(மாற்கு 10:14)

www.Waters-of-Life.net

Page last modified on August 16, 2021, at 05:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)