Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 028 (Parable of the Growing Seed)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
5. கடற்கரையில் அமர்ந்திருந்த திரளான மக்களுக்கு இயேசு படவில் இருந்து பிரசங்கித்தார் (மாற்கு 4:1-34)

உ) இரகசியமாக வளரும் விதை பற்றிய உவமை (மாற்கு 4:26-29)


மாற்கு 4:26-29
26 பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து; 27 இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. 28 எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும். 29 பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

நற்செய்தியில் வெளிப்படும் வல்லமை தான் இறை அரசு ஆகும். வெடிப்பொருளின் சக்தியைவிட அதிக வல்லமை நிறைந்தது நமது ஆண்டவருடைய வார்த்தை ஆகும். அது அமைதியாக செயல்படுகிறது. கோதுமை விதை பூமியில் கற்கள் மற்றும் பலதடைகளை மேற்கொண்டு முளைப்பது போல செயல்படுகிறது. நற்செய்தியில் தங்கியுள்ள இறைவார்த்தையை கற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் பெலனடைந்து, என்றென்றும் வாழ்வீர்கள்.

விதைக்கிறவன் மூலம் கோதுமை விதை தூவப்படுவதைப் போல, இறைவார்த்தையையும் அறிவிப்பவர் தேவை. கிறிஸ்துவுக்குப் பின்பு, அப்போஸ்தலர்கள் மனிதர்களின் இருதயங்களில் ஆண்டவருடைய விதையை விதைத்தார்கள். வாழ்வு தரும் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் கிறிஸ்துவினுடைய சாட்சியின் வட்டம் அதிகரிக்கிறது. நீங்கள் அதில் ஒரு நபரா?

கிறிஸ்துவே முதலாவது பரலோக கோதுமை மணி ஆவார். நாம் பிழைத்திருக்கும்படி அவர் மரித்தார். அவருடைய மரணத்திற்குப் பின்பு, அப்போஸ்தலர்கள் பலவீனத்தின் மத்தியில் அவர் வல்லமை வெளிப்பட்டது. எனவே அவர்கள் பிரசங்கத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளானார்கள். அந்த ஒரு நூற்றாண்டில் இறைவார்த்தை விதைகள் மத்தியத்தரைக்கடல் பகுதி முழுவதும் பரவியது. இன்று நம்முடைய முழு பூகோளமும் இறைவனின் பணிக்களமாக உள்ளது. நீங்கள் கிறிஸ்துவின் கரத்தில் கோதுமை மணியானால் அவர் விருப்பப்படி உங்களைப் பயன்படுத்துவார். மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியையும், ஆவிக்குரிய பெலத்தையும் கொடுக்கும்படி செயல்படுகிறார். அல்லது நீங்கள் உங்களுக்காக வாழ்பவரா? அல்லது உங்கள் சகமனிதனுக்காக வாழ்பவரா? நீங்கள் சாட்சியிடும் வார்த்தைகள், உங்கள் நீதியுள்ள நடக்கை உங்கள் நண்பர்களிலும், உங்கள் எதிரிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அங்கே ஆயத்தம்பண்ணப்பட்ட இருதயங்களில் கிறிஸ்து நாட்டப்படுவார். உங்கள் வார்த்தையை அவர்கள் மனங்களில் நிலைப்படுத்துவார். கிறிஸ்துவைக் குறித்த உங்கள் சாட்சி இறை வல்லமையுடன் செயல்படும். மற்றவர்களை இரட்சிப்பது நீங்கள் அல்ல. நற்செய்தியில் உள்ள இறை வல்லமை மட்டுமே இரட்சிக்கும். எழுந்திருந்து, முழுமையான நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். உங்கள் ஆண்டவரை நம்புங்கள். நற்செய்தி தான் அவருடைய வல்லமை. நீங்கள் அல்ல. அதுவே அவருடைய ராஜ்யத்தைக் கட்டுகிறது.

உங்கள் நண்பரில் அன்பு மற்றும் நம்பிக்கையுடன் விசுவாசம் வளரும். கோதுமை விதை உவமையில் நாம் கற்றுக்கொண்டபடி, வேர், தண்டு, செடி என்று அனைத்து இயல்போடும் வளர்கிறது. நற்செய்தியினால் நிறைந்த ஒவ்வொரு இருதயமும் அமைதியாக வளர்கிறது. இறை ராஜ்யத்தின் சட்டங்களுக்குட்பட்டு வளர்கிறது. எனவே புதிய விசுவாசிகளிடம் இருந்து முதலாவது தலைப் பகுதியை எதிர்பார்க்காதீர்கள். உறுதியான தண்டுப் பகுதியை எதிர்பார்க்க வேண்டாம். பொறுமையாயிருங்கள். நற்செய்தியின் வல்லமையை விசுவாசியுங்கள். அதுவே தீமைகளை மேற்கொள்ளும். வசனத்தைக் கேட்பவர்கள் தங்கள் உயிருள்ள ஆண்டவரை விசுவாசிப்பவர்கள்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்கு நித்திய வாழ்வைக் கொடுத்தீர். உமது வல்லமையினால் எங்களை நிரப்பினீர். இந்தக் கடின உலகில் உமது குமாரனின் வார்த்தையைக் கொண்டு செல்ல உமது வல்லமையினால் எங்களை நிரப்பும். எங்கள் பாவங்களை மன்னியும். நாங்கள் பரிசுத்தமாய் நடக்க உதவும். உமது நற்செய்திக்கு தடையாய் இராதபடி எங்களை பரிசுத்தப்படுத்தும். உமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவரச் செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. What is the mystery of growing in the kingdom of God?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 12:01 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)