Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 078 (The Great Tribulation is Coming)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)

5. மகா உபத்திரவம் நம் மீது வரப்போகின்றது (மாற்கு 13:19-20)


மாற்கு 13:19-20
19 ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். 20 கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

கி.பி 70-ல் ஏற்பட்ட எருசலேமின் வீழ்ச்சியைப் போல இன்னுமொரு பெரிய உபத்திரவம் நேரிடுமோ? எல்லா மனிதர்கள் மீதும் வரப்போகிற மகா உபத்திரவத்தின் ஒரே அடையாளமாக பழைய உடன்படிக்கையின் மக்கள் இருப்பார்களா? இதற்கான பதில் “ஆம்” என்பதே.

பழைய உடன்படிக்கையைவிட புதிய உடன்படிக்கையின் கிருபைகள் பெரியவை. எனவே பழைய உடன்படிக்கையின் மக்கள் மீது உண்டான நியாயத்தீர்ப்பைவிட இந்த உலகத்தின் மக்கள் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்பு மகா பெரியது.

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தை விண்ணப்பத்துடன் வாசியுங்கள். எதிர்காலததைக் குறித்த தீர்க்கதரிசனங்களின் மற்ற வசனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது உலகத்தின் பாவம் நிறைவேறிய பின்பு ஏற்படும் நியாயத்தீர்ப்பு குறித்த உண்மைகளை அறிய முடியும்.

ஒரு தனிப்பட்ட அல்லது ஒருசில நிகழ்வுகளாக உலகத்தின் முடிவு இருக்காது. அது தீமையின் எல்லா ஆதாரங்களையும் அடியோடு ஒழிப்பதாக இருக்கும். மக்கள் மீது அழிவைக் கொண்டு புதிய மின்சாதனங்கள், நியூக்ளியர் அணுக்கதிர்களை மனிதன் பயன்படுத்துவான்.

மகா உபத்திரவ காலம் எப்போது முடிவுக்கு வரும்? பின்வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் அல்லது மொத்தமாக நடைபெறும்.

எல்லா மனிதர்களும் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானவர்கள். வித்தியாசமே இல்லை. எல்லோரும் பாவம் செய்து இறை மகிமையற்றவர்களானார்கள். இறைவனுடைய கோபாக்கினை அவபக்தியுள்ளோர் மீது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சிலுவையிலறையப்பட்ட மனுவுருவான கிறிஸ்துவை தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு கடவுள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சில ஒழுக்கவிதிகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து வாழும்படி நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அவர்கள் இறைவனை மறுதலிக்க நேரிடலாம். ரஷ்யாவிலும், சீனாவிலும் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான உபத்திரவங்கள் நேரிடும்.

சோதனைகள் பெருகினாலும், இறைவனுக்கு உண்மையாக இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் பூமியல் இருப்பார்கள். அவர்கள் உபத்திரவங்கள் வழியே கடந்து செல்வார்கள். அவர்கள் தங்கம் மற்றும் வெள்ளியைப்போல சுத்திகரிக்கப்படுவார்கள்.

தங்களுடைய கொள்கைகளை உறுதியாகப் பிடித்திருக்க யூதர்கள் மற்ற மக்களை விட்டு பிரிக்கப்படுவார்கள். அவர்கள் மனிதர்களை எதிர்பார்கள். உண்மையான கிறிஸ்துவை புறக்கணிப்பார்கள். அப்போது எருசலேமில் உள்ள எல்லா மக்களும் வீழ்ச்சியடைவதற்கான ஆதாரமாக இருக்கும்.

ஆண்டவர் நியாயத்தீர்ப்பை மட்டும் பேசவில்லை. அவர்கள் நம்பிக்கையைப் பெலப்படுத்தி ஆறுதலின் வார்த்தைகளைத் தருகிறார். “தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்”. இறைவன் வல்லவராக இருக்கிறார். ஆண்டவரும் விசுவாசிகளுடன் சேர்ந்து சோர்வுற்ற நேரங்களில் பாடுபடுகிறார். ஆண்டவர் தமது ஆவிக்குரிய சரீரத்தின் அங்கங்களை ஒருபோதும் மறக்கமாட்டார். அவர்கள் பாடுபடும் போது அவரும் பாடுபடுகிறார். சவுல் விசுவாசிகளை துன்புறுத்திய போது, கேட்டார்: “நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?”.

தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்? எபேசியர் நிரூபத்தில் (1:4; 2:1) நாம் வாசிக்கிறோம். அவர்கள் மற்ற மக்களைவிட சிறந்தவர்கள் அல்ல. ஆனாலும் இறைவன் அவர்களை (கிறிஸ்துவுக்குள்) தெரிந்துகொண்டார். இறைவனுடைய குமாரனின் இரத்தம் அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் சுத்திகரிக்கிறது. அவருடைய முடிவற்ற அன்பு அவர்களை இறைவன் தரும் நித்திய வாழ்வுக்கு நேராக நடத்துகிறது. எனவே ஒரு மனிதன் சிலுவையைக் குறித்து மேன்மை பாராட்ட முடியும். இயேசு மட்டுமே பாவிகளை இரட்சிக்கிறார். அவருடைய வல்லமையான அன்பை அவர்கள் புறக்கணிக்க முடியாது. உலகத் தோற்றத்திற்கு முன்பு குறிக்கப்பட்டதை அவர்கள் முழு இருதயத்தோடும், விருப்பத்தோடும் ஏற்றுக்கொள்வார்கள்.

தன்னுடைய முதலாவது நிரூபத்தில் பேதுரு புதிய உடன்படிக்கை மக்களுக்கு இறைவன் காண்பிக்க இரக்கங்களின் ஆழத்தைக் காண்பிக்கிறார் (1 பேதுரு 2:9-10).

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, உமது நியாயத்தீர்ப்பு நீதியும் நேர்மையுமானது. ஒருவரும் உமக்கு முன்பாக நீதிமான் அல்ல. உமது நியாயத்தீர்ப்பின் முன்பு மனிதனின் நீதி நிற்க முடியாது. உமக்கு முன்பாக நிற்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தையும், நீதியையும் நாங்கள் பற்றிக் கொள்கிறோம். உபத்திரவ நேரங்களில் நாங்கள் இதை இழந்துவிடாதபடி காத்துக்கொள்ளும். எங்கள் சரீரங்களை துன்புறுத்தினாலும் உம்மை மறுதலிக்காமல் இருக்க உதவும். அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தவும், அவர்கள் புதுப்பிக்கப்பட்ட வாழ்வை அடையவும் உதவி செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. மகா உபத்திரவ காலத்தில் யார் பிரவேசிப்பார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 06:55 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)