Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 045 (Christ Denies the Demand for a Special Miracle)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

17. சிறப்பான அடையாளத்தைக் கேட்ட போது கிறிஸ்து மறுத்தார் (மாற்கு 8:10-13)


மாற்கு 8:10-13
10 உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார். 11 அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 12 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப் படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 13 அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்.

பரிசேயர்கள் தத்துவ ஞானிகள் அல்ல. அவர்கள் விசுவாசம் மட்டும் போதாது என்று சொல்லி மத சம்பந்த நடவடிக்கைகளை வாழ்வில் கடைப்பிடிக்க நாடிய மனிதர்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தை உறுதியாக கடைப்பிடித்தார்கள். கட்டளைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்கள்.

மேலை நாட்டவர், கீழை நாட்டவர்களுக்கும், கிரேக்கர்கள் மற்றும் செமித்தியர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை இங்கு நாம் காண்கிறோம். எபிரெயர்கள் இறைவனுடனான அவர்களின் உடன்படிக்கைக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு அனுபவத்தை தேடினார்கள். ஐரோப்பாவில் இருந்த தத்துவ மேதைகள் காரணங்கள், நோக்கங்கள், கொள்கைகளின் தாற்பரியங்களை சிந்தித்தார்கள். அவர்கள் இறைவனை அறிய முயற்சித்தார்கள். விசுவாத்தைக் குறித்து சிந்தித்தார்கள். செமித்தியர்களும் தங்கள் பகுதிகளில் பரிசுத்தத்தை தேடிய மனிதர்களாக இருந்தார்கள். இவ்விதமாக அனைத்து மதங்களுக்கும் அச்சாணியாக சட்டங்கள் உள்ளன.

இயேசுவின் வல்லமைக்கு அடையாளமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தும்படி பரிசேயர்கள் அவரைக் கேட்டார்கள். எலியா வானத்தில் இருந்து எதிரிகள் முன்பு அக்கினியை இறக்கியது போல ஓர் அற்புதத்தை இயேசு செய்வதை அவர்கள் பார்க்க விரும்பினார்கள். வியாதியஸ்தரை சுகமாக்குதல், பிசாசுகளைத் துரத்துதல் ஆகியவற்றில் அவர்கள் திருப்தியாகவில்லை. அவர்கள், அன்பு, இரக்கம், ஞானத்தை தேடவில்லை. அவர்கள் வெளிப்பிரகாரமான அரசியல் தாக்கத்தை உண்டுபண்ணுகிற உணர்வுப்பூர்வமான அடையாளத்தைக் கேட்டார்கள். ஆனால் இயேசு அதைச் செய்யவில்லை. வல்லமை, பணம் அல்லது உலக ஆசைகளின் படி அவரிடம் வருபவர்களுக்கு அவர் அதை நிறைவேற்றுவதில்லை.

கிறிஸ்துவே இறைவனின் பெரிய அடையாளமாக இருக்கிறார். எனவே வேதபாரகர்களுக்கு அவர் இணங்கவில்லை. குமாரனின் வல்லமைக்கு அடையாளமாக அவர் அற்புதம் நிகழ்த்தவில்லை. அவர் மனிதனாக வந்தார். பிதாவை அறிக்கை செய்தார். அவருடைய அன்பு வெளிப்பட்டது. மகிமையான இறைவனுக்குள் மறைந்திருந்து சத்திய வார்த்தைகளை வெளிப்படுத்தினார். வியாதியுற்றோரை சுகமாக்கினார். கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்போர், அவரே மிகப்பெரிய இறைவனின் அடையாளம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் பரிசுத்த ஆவியினால் பிறந்தவர். உலகத்தின் பாவத்தை தன் மீது சுமந்து, நம்மை இறைவனுடன் ஒப்புரவாக்கினார். அவரே ஜீவன். அவருடைய இறைத்தன்மைக்கு அவரது உயிர்த்தெழுதல் ஓர் ஆதாரம். இறைவனுக்கு எதிரான அனைத்தின் மீதும் அவர் வெற்றி சிறந்தார். கிறிஸ்துவே ஜீவன். அவர் தமது பரிசுத்த ஆவியினால் நமக்கு வாழ்வு தருகிறார். நீ இறைவனுடைய குமாரனை விசுவாசிப்பாய் என்றால், அவர் தரும் வெற்றி வாழ்வை அடைவாய். நீடித்து வாழ்ந்து, அவருடைய இரக்கம், வல்லமை அவருடைய சபையில் இன்று அனுபவிப்பாய். கிறிஸ்து இவ்விதமாக கீழை தேசத்தார் மற்றும் மேலை நாட்டார் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தருகிறார். அவருடைய இறைத்தன்மை, அவருடைய அன்பின் வல்லமையால் ஆவியின் பிரமாணத்தை நம்மில் கொண்டு வருகிறார்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். நீர் உமது குமாரனின் மனுவுருவாதல், பாடுமரணம், மகிமையின் உயிர்த்தெழுதல் மூலம் பரலோகத்தில் இருந்து எங்களுக்கு ஓர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளமாக தந்துள்ளீர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் அபிஷேகம் பண்ணியவரை நாங்கள் விசுவாசிக்கிறோம். உமது பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பும். எங்கள் பலவீனம், அறியாமையில் உமது பெலன் வெளிப்பட ஒப்புக்கொடுக்கிறோம். உமது ஆறுதலின் ஆவியானவர் எங்களை பூரண சத்தியத்திற்குள் வழிநடத்துவராக ஆமென்.

கேள்வி:

  1. இயேசு ஏன் பரிசேயர்களுக்கு சிறப்பான அற்புதத்தை காண்பிக்கவில்லை?

www.Waters-of-Life.net

Page last modified on August 15, 2021, at 06:53 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)