Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 024 (Parable of the Sower)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
5. கடற்கரையில் அமர்ந்திருந்த திரளான மக்களுக்கு இயேசு படவில் இருந்து பிரசங்கித்தார் (மாற்கு 4:1-34)

அ) விதைக்கிறவன் உவமையும், நான்கு விதமான நிலங்களும் (மாற்கு 4:1-9)


மாற்கு 4:1-9
1 அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள். 2 அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது: 3 கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். 4 அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. 5 சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; 6 வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. 7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. 8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது. 9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.

இறைவன் தமது குமாரன் மூலம் நம்முடன் பேசுகிறார். பரலோகம் மற்றும் பூமியின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். யூதத் தலைவர்கள் எருசலேமில் இருந்து வந்து அவர் செயல்களைக் கவனித்தார்கள். கிறிஸ்து தனது ராஜ்யத்தின் தன்மைகளைக் குறித்து நேரடியாகப் பேசவில்லை. அவர் உவமைகளைப் பயன்படுத்திப் பேசினார். அதன் பொருளை அவர்கள் உணரவில்லை. சத்தியத்திற்கான ஆயத்தம் என்பது வளர்ச்சி பெறுகிறது, முன்னேற்றம் அடைகிறது. மதத்தலைவர்கள் கிறிஸ்துவையும், அவரைப் பின்பற்றுபவர்களையும் தவறாக குற்றம் சாட்டி, சிறைபிடிக்காதபடி இயேசு செயல்பட்டார். கிறிஸ்து முழு சத்தியத்தையும் பிரசங்கித்தார். அவர் விவேகத்தோடும், ஞானத்தோடும் பேசினார்: “சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும், புறாவைப் போல கபடற்றவர்களுமாய் இருங்கள்” என்று கூறினார்.

விதைக்கிறவன் உவமையில், இயேசு தன்னை வெளிப்படுத்தினார். தனது அனுபவங்களில் அவர்களும் பங்கு பெறச் செய்தார். இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொள்ளும்படி செயல்பட்டார். பிரசங்கத்தின் மையம் இதுதான்: எல்லா மக்களும் கேட்டு, ஒரே விதத்தில் பதிலளிப்பது கிடையாது. இருதயங்களில் இறைவனுடைய வார்த்தை ஏற்படுத்தும் நான்கு விதமான தாக்கங்கள் உள்ளன.

யாராவது வழியருகே விதைப்பதை நீங்கள் பார்த்ததுண்டா? ஒருவரும் அப்படிச் செய்வதில்லை. அது பயனற்றது. ஆனாலும் இரட்சிப்பின் வாய்ப்பை இறைவன் கடின இருதய மக்களுக்கும் வழங்குகிறார். பொழுதுபோக்கு அம்சங்கள், மதக்கவர்ச்சிகள் அல்லது பக்தி நடவடிக்கைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறவர்கள் கடினப்படுகிறார்கள். அவர்கள் கேட்பதோ அல்லது கவனிப்பதோ கிடையாது. ஏனெனில் அவர்கள் தேவையற்ற காரியங்களை சிந்திக்கிறார்கள். அவர்களுடைய இருதயங்கள் வெறுமையான கொள்கைகளினாலும், சட்டங்களினாலும் நிறைந்துள்ளது. தங்கள் செத்த கொள்கைகளின் அடிப்படையிலேயே அவர்கள் எப்போதும் சிந்திக்கிறார்கள்.

ஆழமாய் வேரூன்றாதவன் ஆர்வமாய் வருகிறான். கிறிஸ்துவின் அழைப்பிற்கு உடனடியாக பதிலளிப்பவன், அதே வேகத்தில் வீழ்ந்தும் போகிறான். உணர்ச்சியுள்ள விசுவாசம் என்பது போதுமானது அல்ல. உள்ளான மனதில் ஆழமாக சிந்திப்பதும், பொறுமையுடன் இருப்பதும், கடவுளின் இரக்கத்தினால் இருதயம் நொறுங்குண்ட நிலையும் அவசியம்.

வறுமை மற்றும் துன்பங்களினால் பாடுபடுகிறவர்கள் இறைவார்த்தையை ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். தனது உலகப் பாடுகளுக்கு ஆறுதலைப் பெறுகிறான். ஆனால் அவன் சுயத்தை மறுக்கவில்லை. தனது பண ஆசையை விடவில்லை. இறைவனுக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுக்கவில்லை. பாடுகள் அதிகமாகும் போது இறைவனை வெறுத்து, அவருக்கு எதிராக தூஷணம் பேசுகிறான். அவன் பிதாவின் அன்பில் நிலைத்து நிற்பதில்லை. அவர் தரும் இறைவாழ்வை ஏற்றுக்கொள்ளவில்லை. இறைவனுடைய வார்த்தையை மறந்துபோகிறான். ஆனால் உடைந்த இருதயத்துடன் மனந்திரும்புவன் இறைவனை நெருங்கிச் சேர்கிறான். அவனுடைய பாவங்கள் நிமித்தம் அவன் மனித உதவியைத் தேடாமல், உண்மையான மன்னிப்பை தேடுகிறான். தனது பாவ சுபாவத்தின் மீதான வெற்றியை நாடுகிறான். அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறான். அவன் இறைவார்த்தையைக் கேட்பதினால், ஆவியின் கனியைத் தருகிறான். மனந்திரும்பிய பாவியில், தனது வல்லமையுள்ள வார்த்தைக்கான நல்ல நிலத்தை ஆண்டவர் காண்கிறார்.

விண்ணப்பம்: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நாங்கள் நடக்க முடியாததினால் அதை எண்ணி வருத்தப்பட்டு அறிக்கையிடுகிறோம். உமது வார்த்தையை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எங்கள் இருதயக் கடினத்திற்காகவும் கவலைகளால் நிறைந்திருப்பதற்காகவும் எங்களை மன்னியும். உமது பரிசுத்த ஆவியினால் மெய்யான மனந்திரும்புதலுக்கு நேராக எங்களை நடத்தும். உமது வார்த்தை எங்களில் நற்கனியைக் கொண்டுவரச் செய்யும். உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய உதவும். நாங்கள் குறைவுபடாமல், உமது கிருபையில் வளரச்செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. இறைவார்த்தையைக் கேட்கும் நான்கு விதமான மக்கள் யார்? அவர்கள் செயல்படும் வித்தியாசமான வழிகள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 07:27 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)