Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 094 (Jesus Before the Civil Court)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

11. நியாயாசனம் முன்பு இயேசுகிறிஸ்து (மாற்கு 15:1-15)


மாற்கு 15:1-15
1 பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். 2 பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 3 பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங் குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. 4 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். 5 இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். 6 காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது. 7 கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். 8 ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். 9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து, 10 அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான். 11 பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள். 12 பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 13 அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள். 14 அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். 15 அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

அந்த வேதனை நிறைந்த இரவு நேரத்தில் பெருமையும், கொலைபாதகமும் நிறைந்த ரோம ஆளுநரிடம் இயேசு வழி நடத்தப்பட்டார். எவருக்கும் மரணதண்டனை தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் யூதர்களுக்கு இல்லை. பிரதான ஆசாரியர்கள், திறமைமிக்க நியாயாதிபதிகள், வேத நிபுணர்கள் அடங்கிய எழுபது மூப்பர்கள் குழு இயேசுவை அவிசுவாசிகளின் கையில் ஒப்புக்கொடுத்து கொல்ல தீர்மானித்தார்கள். தேசம் முழுவதும் இந்தக் காரியத்தை பரவச் செய்து இயேசுவிற்கு அவப்பெயர் ஏற்படுத்த யோசித்தார்கள். இயேசு பலவீனராகவும் இறைவனால் புறக்கணிக்கப்பட்டவராகவும், மக்களின் அதிபதிகளால் நிராகரிக்கப்பட்டவராகவும் தோன்றினார்.

இயேசு உயிருள்ள இறைவனின் குமாரன், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்று சாட்சியிட்டதினால் அவருக்கு மரணத்தண்டனை வழங்க வேண்டும் என்று தந்திரமிக்க யூதர்கள் பிலாத்துவிற்கு சொல்லவில்லை. ஆனால் அவர்கள் அரசின் நியாயாசனம் முன்பு அவர் தன்னை ராஜா என்றும், ரோம ஆதிக்கத்திலிருந்து தேசத்தை விடுதலை செய்யும் அதிபதி என்றும் கூறுவதாக வலியுறுத்திப் பேசினார்கள்.

பிலாத்து அவரிடம் நேரடியாகக் கேட்டான்: “நீ யூதருடைய ராஜாவா?” இயேசு இந்தப் பட்டப்பெயரை மறுதலிக்கவில்லை. அவர் பூமியில் தன்னுடைய ராஜரீகப் பணியை நிரூபித்து, அதை அறிக்கையிட்டார். அவர் தன்னை எளிதாகக் காப்பாற்றியிருக்க முடியும். அவர் தனது பதிலை வேறுவிதமாக கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இறைவனின் உண்மையை அவர் மறுக்கவில்லை. உன்னதமானவர் அவர்களின் இருதயங்களை மட்டுமல்ல, அவர்களின் வாழ்வு, பணம், நேரம், வாழ்வியல் முறைகள் அனைத்தையும் அறிந்திருந்தார். கிறிஸ்துவின் மீதான விசுவாசம் என்பது இறைவனின் குமாரன் ராஜா என்ற சிந்தனையையும் உள்ளடக்கியுள்ளது. நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையினால் உலகத்தை புதுப்பிப்பது தான் இறைவனுடைய ராஜ்யத்தின் திட்டம் ஆகும்.

பிலாத்து அவரிடம் நேரடியாகக் கேட்டான்: “நீ யூதருடைய ராஜாவா?” இயேசு இந்தப் பட்டப்பெயரை மறுதலிக்கவில்லை. அவர் பூமியில் தன்னுடைய ராஜரீகப் பணியை நிரூபித்து, அதை அறிக்கையிட்டார். அவர் தன்னை எளிதாகக் காப்பாற்றியிருக்க முடியும். அவர் தனது பதிலை வேறுவிதமாக கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இறைவனின் உண்மையை அவர் மறுக்கவில்லை. உன்னதமானவர் அவர்களின் இருதயங்களை மட்டுமல்ல, அவர்களின் வாழ்வு, பணம், நேரம், வாழ்வியல் முறைகள் அனைத்தையும் அறிந்திருந்தார். கிறிஸ்துவின் மீதான விசுவாசம் என்பது இறைவனின் குமாரன் ராஜா என்ற சிந்தனையையும் உள்ளடக்கியுள்ளது. நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையினால் உலகத்தை புதுப்பிப்பது தான் இறைவனுடைய ராஜ்யத்தின் திட்டம் ஆகும்.

இயேசு யூதர்களின் குற்றச்சாட்டுகளைக் கேட்டு பிலாத்து முன்பு அமைதியாக இருந்தார். அவர் தேசாதிபதி முன்பு சத்தியத்தை வெளிப்படுத்தினார். அவரைக் குறித்தும், அவருடைய ராஜ்யத்தின் இரகசியம் குறித்தும் இரகசியத்தை அறிக்கையிட்டார். இயேசு தமது முடிவு நெருங்கியிருப்பதை அறிந்தார். ஆனாலும் அவர் மரணத்தைக் குறித்துப் பயப்படவில்லை. அவர் மனிதனிடம் இரக்கத்திற்காக கெஞ்சவும் இல்லை. தமது ராஜரீக அமைதியின் மூலம் அவர்களின் பொய்களைக் கடிந்துகொண்டார்.

இறைவனுடைய வார்த்தையைக் கேட்காத மனிதனுக்கும், மக்களுக்கும் ஐயோ, கிருபையை அடைய இது ஒன்றே வழி. எந்த தேசத்துடன் தமது இரக்கத்தின் மூலம் இறைவன் பேசுகிறாரோ, அந்த தேசம் பாக்கியமுள்ளது. அவர் இரக்கம் காண்பிக்கிறார். தமது சத்தத்தைக் கேட்பவர்களை பராமரிக்கிறார். அவர்களுடைய இரட்சிப்பை நாடுகிறார்.

இறுதியாக பிலாத்து சமரசம் செய்யும் முயற்சியாக மக்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தான். ஒரு கொலைபாதகன் அல்லது இறைவனின் தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டி இருவரில் யாரேனும் ஒருவரை விடுதலை செய்யத் தீர்மானித்து, அந்த பொறுப்பை மக்களுக்கு வழங்கினான். அவன் சத்தியத்துடன் விளையாடினான். பெருந்திரளான மக்கள் மனந்திரும்புதல் மற்றும் சுய மறுப்பிற்கு தங்களை அழைக்கும் தாழ்மையுள்ள மனிதனை விரும்பவில்லை. அவர்களுக்கு விடுதலை, பணம் மற்றும் பெரிய காரியங்களை யுத்தத்தினால் பெற்றுத்தரும் ஒரு பலமிக்க கதாநாயகனை விரும்பினார்கள். மேலும் மதத் தலைவர்களும் யூதர்களை தூண்டிவிட்டார். சிலருக்கு லஞ்சம் கொடுத்து இயேசுவின் மீது குற்றம் சாட்டினார்கள். இயேசு மரணத்திற்கு பாத்திரர் என்று பேச வைத்தார்கள்.

கீழ்ப்படியாத பெருந்திரள் மக்களை பிரியப்படுத்த பிலாத்து விரும்பினான். அவன் இராயனைப் பிரியப்படுத்த, மக்களின் கூச்சல் குழப்பத்தை தடுக்க வேண்டும். தேசாதிபதிகள் சமாதானத்தை நிலைநாட்டத் தவறும் போது ரோமப்பேரரசன் அவர்களை பதவியிலிருந்து அகற்றிவிடுவான். பிலாத்து தனது பதவியைக் குறித்து பயந்தான். நீதியை நிலைநாட்டுவதற்கு பதிலாக பேரரசனுக்கு சாதகமாக செயல்பட்டான். அவன் சத்தியத்தை மீறினான். குற்றமற்ற இயேசுவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தான். தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், யூத எதிர்ப்பாளர்களை பிரியப்படுத்தவும், தேசத்தில் அமைதியை காக்கவும் எண்ணி, இப்படிச் செயல்பட்டான்.

பிரியமான சகோதரனே, எவ்விதம் மனிதர்கள் இயேசுவை நியாயம் தீர்த்தார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பார். மக்கள் கூட்டம் அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்றும் அவர் சாக வேண்டும் என்றும் கூக்குரலிட்டது. இது தான் கீழ்ப்படியாமையின் பிதாவிடம் இருந்து வரும் கீழ்ப்படியாமையின் ஆவி ஆகும். இறைவனிடமிருந்து நம்மை விலக்கி, கலகம், பகை மற்றும் அநீதியினால் நம்மை ஆள முற்படுகிறது.

நீ அக்காலத்தில் வாழ நேர்ந்திருந்தால், யாரை தெரிந்தெடுத்திருப்பாய்? தனது மக்களுக்கு விடுதலையை வாக்குப்பண்ணிய புரட்சிக்காரன் பரபாசையா? அல்லது உலகத்தின் பாவத்தை மன்னித்து, மக்களுக்கு விடுதலை, சுதந்திரம், நன்மையைத் தரும் இரக்கம், தாழ்மை நிறைந்த இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவையா?

உனது தெரிந்தெடுப்பை கவனமாக யோசித்துப்பார். இன்றே இறைவனுடைய குமாரனுக்கு சாட்சி பகிர்வதை தெரிந்தெடு. அவர் உலகின் இரட்சகர். தன்னைப் பின்பற்றுவோரின் இருதயங்களில் தமது ராஜ்யத்தைக் கட்டுகிறார்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் மெய்யான ராஜா. உமக்கு முன்பாக நான் அறிக்கையிடுகிறேன். தாழ்மை, சாந்தம், திருப்திக்குப் பதிலாக பதவி, பணம், வல்லமை போன்ற காரியங்களை அதிகமாக தேடியிருக்கிறேன். என்னை மன்னியும். நான் சத்தியத்தை புறக்கணித்திருக்கிறேன். சிறைச்சாலையில் உள்ளே கட்டப்பட்டிருக்கும் நிரபராதிகளுக்கு நான் உதவி செய்ய தவறியுள்ளேன். சத்தியத்தில் நடக்கும் வழியை எனக்குக் கற்றுத் தாரும். நீதி மற்றும் உண்மைக்காக நிற்கும் தைரியத்தை உம்மிடம் கற்றுக்கொள்ள உதவும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு தம்மை ராஜா என்று அறிக்கையிட்டதின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 01:45 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)