Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- English -- Mark - 031 (Jesus Heals a Demon-Possessed)
This page in: -- Arabic -- ENGLISH -- Indonesian -- Tamil -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
6. புயல், ஆவிகள், மரணத்தின் மீது இயேசுவின் வல்லமை (மாற்கு 4:35- 5:43)

ஆ) கதரேனருடைய நாட்டில் இயேசு பிசாசு பிடித்த மனிதனை சுகமாக்கினார் (மாற்கு 5:1-20)


மாற்கு 5:1-20
1 பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். 2 அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். 3 அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. 4 அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. 5 அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். 6 அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: 7 இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். 8 ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார். 9 அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, 10 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 11 அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. 12 அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 13 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது. 14 பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; 15 இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். 16 பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள். 17 அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். 18 அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். 19 இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளை யெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். 20 அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஒளியானது இருளில் பிரகாசிக்கிறது. இருளானது அதை மேற்கொள்ளவில்லை. கிழக்குப்பகுதியில் உள்ள தனது சொந்த ஊரை விட்டு இயேசு விக்கிரக ஆராதனைக்காரர்கள் நிறைந்துள்ள பகுதிக்கு வந்தார். அங்கே மக்கள் இறைவனுடைய நியாயப்பிரமாணம் இல்லாமல் இருந்தார்கள். பன்றி இறைச்சியைச் சாப்பிட்டார்கள். அசுத்த ஆவிகளுடன் தொடர்புகொண்டார்கள். அவைகள் சிலரை ஆட்கொண்டிருந்தன. பிசாசு பிடித்தவர்கள் இறந்தவர்களைப் போல கல்லறைகளில் வாழ்ந்தார்கள். இறைவனுடைய ஆவியை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு ஐயோ. அவர்கள் தத்துவங்களையும், விஞ்ஞானத்தையும் சார்ந்துள்ளார்கள். மரித்தவர்களின் ஆவியை அழைக்கிறார்கள். அவர்கள் தீமையுள்ளவர்களாக, மனிதத்தன்மையிழந்து, அழிவைத் தீவிரமாக கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய நிலையில் மரித்திருக்கிறார்கள்.

தீமையினால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதி மக்களிடம் இயேசு வந்தார். கிறிஸ்துவின் வல்லமை அறியப்பட்டுள்ள இடங்களில் பிரகாசமுள்ள ஆட்டைச் சுற்றிலும் சூழ்வது போல ஆவிகள் தாக்குகின்றன. அவருடைய பிரசன்னம் சமாதானம் மற்றும் மகிழ்ச்சியை அவருடைய விசுவாசிகளுக்கு கொடுக்கின்றன. அசுத்த ஆவிகள் அழிவையும், பயத்தையும் கொண்டு வருகின்றன. கொந்தளிக்கும் புயலுக்கு இயேசு பயப்படாமல் இருந்தது போல, அவர் பிசாசுகளையும், பிசாசு பிடித்த மனிதர்களையும் கண்டு பயப்படவில்லை. அவர்களைக் கண்ட போது மக்கள் பயந்து ஓடினார்கள். பிசாசு பிடித்திருந்த மக்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்கள். அவர்கள் வழியே கடந்து செல்வோர் மீது கற்களை எறிந்தார்கள். கற்களைக் கொண்டு தங்களையே காயப்படுத்திக் கொண்டார்கள்.

ஆனாலும் இயேசு அவர்களுடன் அன்பாகப் பேசினார். எந்த ஒரு ஆவியும் தன்னைத் தாக்காது என்பதை அவர் அறிந்திருந்தார்.

பிசாசு பிடித்திருந்தவன் இயேசுவின் பாதத்தருகே விழுந்தான். இந்த மனிதனாகிய இயேசுவில் இறைவன் தங்கயிருப்பதை அறிந்தான்.

நரகத்தின் கொடூரத்தை இயேசு அறிந்திருந்தார். இந்த மனிதனுக்குள் அசுத்த ஆவிகள் இருப்பதை அவருடைய சீஷர்களுக்குக் காண்பித்தார். ஆவிகள் தங்கள் அழிவுக்குரிய திட்டங்களை நிறைவேற்ற மனித சரீரத்தைப் பயன்படுத்துகின்றன. அவைகள் அவனை சோர்வடையச் செய்கின்றன. அவனுடைய ஆத்துமாவை வேதனைப்படுத்துகின்றன. அவனை பரிதாபமானவனாக மாற்றுகின்றன.

இயேசு தமது வார்த்தையின் வல்லமையினால் அசுத்த ஆவியின் படையை இந்த பாடுபடுகின்ற மனிதனிலிருந்து துரத்தினார். விரைந்து ஓடி கடலுக்குள் வீழ்ந்த இரண்டாயிரம் பன்றிகளை விட மனிதன் சுகம் பெறுவது முக்கியம் என்று அவர் கருதினார்.

இதன் மூலம் மிருகங்களிலும் அசுத்த ஆவிகள் அமைதியாய் இருக்க முடியாது என்பதை நாம் அறிகிறோம். அவைகள் தீவிரமாய் ஓடியதால், அனைத்தும் மாண்டுபோயின.

பின்பு நாம் பரதீசுக்கான ஓர் படத்தைக் காண்கிறோம். அசுத்த ஆவிகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்றவன் இயேசுவின் பாதத்தருகே, உடை அணிந்தவனாக அமர்ந்திருந்தான். அவன் இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவரை துதித்தான். இது தான் இயேசு தந்த இரட்சிப்பின் விளைவு. அவரிடம் வரும் அனைவருக்கும் புதிய உடை உடுத்தப்படுகிறது. புத்தி தெளிவடைகிறது. இறைவனுடன் சமாதானம் ஏற்படுகிறது, புதிய சிருஷ்டியாக மாற்றப்படுகிறார்கள். கிறிஸ்துவின் அன்பு நம்மை தேர்ச்சி அடையச் செய்கிறது. செய்தியைக் கொண்டு செல்பவனாக மாற்றுகிறது. பயம், பொய், விபச்சாரம் நிறைந்த உலகில் இறை அன்பின் சாயலாகவும், சத்தியத்தை தேடுபவனாகவும் மாற்றுகிறது.

நரக ஆவிகளுக்கு எதிரான பரலோக வல்லமையின் விளைவை அந்தப் பகுதி மக்கள் உணர்ந்தார்கள். அவர்கள் மிகவும் பயந்தார்கள். அவைகள் கிறிஸ்துவை ஆராதிக்கவில்லை. அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. உயிருள்ள கிறிஸ்துவைவிட மிருகங்களை அவைகள் தெரிந்துகொண்டன.

சுகமும், விடுதலையும் பெற்ற மனிதன் இயேசுவுடன் இருக்க விரும்பினான். அவருடைய பாதுகாப்புடன் இருக்க நினைத்தான். ஆனால் அவனுடைய சொந்த நாட்டிற்குச் சென்று, இயேசு அவனுக்கு இரங்கிச் செய்ததை சாட்சியாக அறிவிக்கச் சொன்னார். அவருடைய ஆறுதலின் ஆவி அவனுடன் இருந்தது. மரண இருளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு அவருடைய இரட்சிப்பு நம்பிக்கையாக இருக்கிறது. இந்த மனிதன் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்தான். கிழக்குப்பட்டணங்களிலும், யோர்தானின் நகரங்களிலும் அவன் இறைவல்லமைக்கு சாட்சியாக இருந்தான்.

நீங்கள் புத்தி தெளிந்தவராக இயேசுவின் பாதத்தருகே அமர்ந்துள்ளீர்களா? அவருடைய நாமத்திற்கு சாட்சியாக, மக்கள் மத்தியில் இருக்கிறீர்களா?

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமது இறைவல்லமைக்காக நன்றி கூறுகிறோம். நீர் அன்பு நிறைந்த சர்வவல்லமையுள்ளவர். நீர் எங்களை அழித்துவிடாமல், அசுத்தம், பகை மற்றும் அழிவில் இருந்து எங்களை விடுதலையாக்குகிறீர். எங்களை நற்செயல் மீது பற்றுள்ளவர்களாக மாற்றும். அன்பினாலும், சத்தியத்தினாலும் எங்களை நிரப்பும். உமது வல்லமையைக் குறித்த செய்தியை எங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு கொண்டு செல்ல உதவும். ஆமென்.

கேள்வி:

  1. இயேசு அசுத்த ஆவிகளை அந்த மனிதனிடத்தில் இருந்து துரத்திய பின்பு, அவன் எப்படி வாழ்ந்தான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 12:28 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)